தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்துஉட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக 19 அனைத்துமகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 27.02.2023 அன்றுG.O (Ms) No. 84, Home (Pol.14) Dept, Dated.27.02.2023 அரசாணையின்படி ஆணைபிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை பின்பற்றி ஆவடி பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பட்டாபிராம் சரகத்தில் W37 பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையமானது, இன்று 08.06.2023 முனைவர் திரு. சைலேந்திரபாபு, இ.கா.ப., காவல்துறை தலைமை இயக்குனர்/ HoPF, தமிழ்நாடு காவல்துறை அவர்கள், திரு. அருண், இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர் தலைமையில் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரு. விஜயகுமார். இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்காவல் நிலையத்தில் ஒரு பெண் காவல் ஆய்வாளர், இரண்டு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஐந்து பெண்காவலர்கள் நியமிக்கப்பட்டு இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆவடி பெருநகரக் காவல் எல்லையில் புதிதாக திறக்கப்பட்ட இக்காவல் நிலையத்தையும் சேர்த்து ஆறுஅனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.