தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 11.08.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “போதைபொருட்கள் இல்லாத தமிழ்நாடு (DRUG FREE TAMILNADU)‘‘ என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், Drive Against Drugs (DAD) என்றபெயரில் போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு, கஞ்சா மற்றும்போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படிகடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு போதை பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர இடங்களில் போதை பொருட்களுக்குஎதிரான தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல்துறை சார்பாக நடத்தப்படும் பல்வேறு சமுதாய நல செயல்பாடுகளின்தொடர்ச்சியாக, போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையாக பள்ளி மற்றும்கல்லூரிகளில் “போதைக்கு எதிரான குழு” (Anti-Drugs Clubs) என்ற அமைப்பினருக்கு பயிற்சிமுகாமினை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.பசென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப. மற்றும் காவல்துறை கூடுதல்இயக்குநர் (அமலாக்கத்துறை) மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப. ஆகியோர் முன்னிலையில் துவக்கிவைத்தார்.
பின்னர் போதை பொருட்களுக்கு எதிர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு காமிக் புத்தகத்தை (Awareness Comic Book) காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் வெளியிட்டார். தொடர்ந்து, போதைபொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டு (Awareness Short film), பின்னர்காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரானஉறுதிமொழியை (Anti Drug Pledge) மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியின் முக்கியமாக, போதைக்கு எதிரான குழுவைச் (Anti Drugs Clubs) சேர்ந்த பள்ளி மற்றும்கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு, காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் பேட்ஜ் மற்றும்சான்றிதழ்கள் வழங்கினார்.
போதை பொருட்கள் பயன்பாட்டை முறியடிக்கும் நோக்கில் புதுமையான முன்னெடுப்பாக மாணவ, மாணவியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தை ஈர்க்கும் எண்ணத்தோடு போதைக்குஎதிரான குழுவை (Anti-Drugs Clubs) சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கவும், அதனை பயன்படுத்தாமல்தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் தடுக்க வேண்டும்என்பதே இக்குழுவின் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம்ஆனந்த் சின்ஹா, இ.காப., காவல் இணை ஆணையாளர்கள் அபிஷேக் தீக்ஷித், இ.கா.ப (வடக்குமண்டலம்), A.கயல்விழி, இ.கா.ப., (தலைமையிடம்), காவல் துணை ஆணையாளர்கள், காவல்அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 300 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.