பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்அச்சிட்டவர்வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர்பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தஅவற்றுள் ‘தி இந்து’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும்ைம்ஸ் ஆஃப்இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’  நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும்தினமலர் நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும்ஆனந்த விகடன்’ வார இதழின்ஆசிரியர்  மீது வழக்குகளும்ஜுனியர் விகடன் இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும்,  நக்கீரன் இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும்முரசொலி நாளிதழின் ஆசிரியர்மீது 17 வழக்குகளும்தினகரன் நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தனமேலும்புதிய தலைமுறை தொலைக்காட்சிநியூஸ் 7 தொலைக்காட்சிசத்யம்தொலைக்காட்சிகேப்டன் தொலைக்காட்சிஎன்.டி.டி.வி தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்தொலைக்காட்சி மற்றும் கலைஞர் தொலைக்காட்சிஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தனதிராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல்அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும்நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள்அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதிஅளிக்கப்பட்டிருந்ததுஅந்த வாக்குறுதியைநிறைவேற்றும் வகையில்பத்திரிகையாளர்கள் மீதுபோடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்.