விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடுஅரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலைஅறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல்செய்ய உள்ளது.  தமிழ்நாடு அரசு வரலாற்றில்முதன்முறையாக வழக்கமான நிதிநிலைஅறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள்நலத் துறை சார்பாக தனியே ஒரு நிதி நிலைஅறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதுவேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைநிதிநிலை அறிக்கையினை விவசாயிகள்விவசாயநிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள்ஆகியோரை கலந்தாலோசித்து விவசாயம்செழிக்கவும் விவசாயிகள் அவர்களதுஉழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும்வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கிதயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர்பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும்அறிவுறுத்தினார்

மேலும்பொது நிதிநிலை அறிக்கையினைபொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள்பெருந் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புபிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புபிரதிநிதிகள்வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்மீனவர்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைகலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்டகருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுதமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதியமறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்துதரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்தநிதிநிலை அறிக்கையினை தயாரிக்க மாண்புமிகுஅமைச்சர் பெருமக்களையும் அரசு உயர்அலுவலர்களையும் மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் அறிவுறுத்தினார்.