தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்க கூடாதென்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம்கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மீண்டுவருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது.இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால்அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக்கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைதங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியமருத்துவர்கள்செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்தநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தைத் தொட்ட தொற்றுப் பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறதுமுழு ஊரடங்கு – மருத்துவர்களின் அர்ப்பணிப்பு – மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு – துடிப்பான நிர்வாகம்ஆகிய நான்கின் காரணமாகவும்தான் இந்தளவுக்கு நாம்வெற்றியைப் பெற முடிந்ததுஇன்றைய தகவல்களின்அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில்இருக்கின்றன. ஆக்சிஜன் படுக்கைகளாக இருந்தாலும் – தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக இருந்தாலும்ஏராளமாக உள்ளன. எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்குஉண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டுஎன்பதை நானும் அறிவேன்நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவதுஒன்றே ஒன்றுதான் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்என்று சொல்லலாமே தவிரமுழுமையாக ஒழித்துவிட்டோம்என்று சொல்ல முடியாதுஎனவேமக்கள் யாரும்அலட்சியமாக இருந்து விடக்கூடாதுதளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் – அதனால் நாம் எந்தவிதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும்நினைக்கக் கூடாதுஇன்னமும் பள்ளிகல்லூரிகள் திறக்கப்படவில்லைஅரசியல் மற்றும் சமுதாய விழாக்கள்அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத்திறக்கவில்லை. பூங்காக்கள் திறக்கவில்லை. ஏனென்றால்இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள்.இப்படித் திறக்காமல் இருக்கிறோம் என்றால்ஏன் என்றகாரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கை உணர்வுடன்இருக்க வேண்டும்உணவகம்கடைகள் மற்ற முக்கிய சேவைகள்பொதுப்போக்குவரத்துஅரசு மற்றும் தனியார்அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்குக் காரணம்மக்களின் வாழ்வாதாரத்தின் மீது உள்ள அக்கறையால்தான்முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம்பாதிக்கப்படுகிறதுஅவசியமான பொருள்களைக் கூடவாங்குவதில் சிரமம் இருக்கிறதுஅதேபோல் மாநிலத்தில்பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது – ஆகிய மூன்றுகாரணங்களால்தான் பல்வேறு தளர்வுகளை அறிவித்தோம்இந்த தளர்வுகளுக்கு உள்ளார்ந்த பொருள் இதுதான்.அதனைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரியஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள்அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசிபோட்டு முடிக்கவில்லை. ஒன்றிய அரசால் நமக்குவழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும்முழுமையாக நமக்கு வழங்கவில்லைபள்ளிப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்துஇன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை.குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆலோசனைகள்நடந்துகொண்டு இருக்கின்றன. இப்படி எல்லாத்தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும்.அப்படிச் செலுத்துவதை மக்கள் இயக்கமாகவேமாற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறதுமுழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காதநிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன்இருந்தாகவேண்டும்என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நான்வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை. மக்கள் அனைவரும்தங்களுக்குத் தாங்களே சுயகட்டுப்பாட்டைவிதித்துக்கொள்ள வேண்டும். தேவைக்குஅவசியத்தின்காரணமாக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படிவரும்போதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப்பின்பற்றுங்கள்.

வீட்டை விட்டு வெளியில் வரும் எல்லோரும் முகக்கவசம்அணியுங்கள்.
கூட்டமாகக் கூடுவதை தவிர்த்துவிடுங்கள்
வரிசையில் நின்று வாங்குங்கள்
வரிசையில் நிற்கும்போதும் போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள்
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போதும் – அதிகமான கூட்டம் இருக்கும் இடத்திலும் இரண்டு முகக்கவசங்களைக் கூட பயன்படுத்தலாம்
கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினிகொண்டு சுத்தம் செய்யுங்கள்
கடைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசங்கள் பயன்படுத்துங்கள்
அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணியாற்றுங்கள்
கடைகளின் நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பானை வையுங்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்யுங்கள்
கடைகளுக்குள் ஒரே நேரத்தில் அதிகப்படியானஆட்களை அனுமதிக்க வேண்டாம்
நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்களாகவே தெரிந்த சிகிச்சை முறைகளைச் செய்து கொள்ள வேண்டாம்
– இவை எல்லாமே மிகமிகச் சாதாரணக் கட்டுப்பாடுகள்தான்.இதனைப் பின்பற்றி நடந்து கொண்டாலே கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்கலாம்இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் தங்களுக்குத் தாங்களேபோட்டுக்கொள்ளக் கூடிய சுய கட்டுப்பாடுகளாக மாறவேண்டும்.  அந்த அடிப்படையில் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குத்தாங்களே காவல் அரணாக இருக்க வேண்டும்தளர்வுகளின்போது கட்டுப்பாட்டு விதிமுறைகளைமீறினால்தான் மூன்றாவது அலை வரக் கூடிய சூழல் எழும்என்கிறார்கள் மருத்துவர்கள். கட்டுப்பாடுகளை நாம்ஒழுங்காகக் கடைப்பிடித்தால் எந்த அலையும் உள்ளே வரமுடியாதுஎனவே மக்கள் எல்லாரையும் நான் கேட்டுக் கொள்வது – தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்கவேண்டாம்விதிக்கப்பட்ட விதிமுறைகள் அமலில்தான் உள்ளனவிதிமுறைகளைப் பின்பற்றி நம்முடைய மதியால்கொரோனாவை வெல்வோம்.