செங்கல்பட்டு மாவட்டம், வடகிழக்கு பருவமழையினால் மாவட்டத்தில் ஏற்பட்டமழை வெள்ளப் பாதிப்புகள் மற்றும் சேதார பகுதிகளை மத்திய உள்துறை இணைசெயலாளர் திரு.ராஜீவ் சர்மா அவர்கள், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் இயக்குநர்திரு.விஜய் ராஜ்மோகன் அவர்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகவட்டார அலுவலர் திரு.ரனன்ஜெய் சிங் அவர்கள், ஊரக வளர்ச்சித் துறை சார்பு செயலாளர்திரு.வரபிரசாத் அவர்கள், ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினரை அரசு கூடுதல் தலைமைசெயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் திரு.கே.பணீந்திர ரெட்டி இ.ஆ.ப, அவர்கள்தலைமையில் இன்று (22.11.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்களும் நேரில் அழைத்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை காண்பித்து விளக்கம்அளித்தனர். முதலவதாக, மாமல்லபுரத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகள் மற்றும் சேதராங்கள் குறித்த விளக்கப் புகைப்படக்ககண்காட்சியினை மத்தியகுழுவினர் பார்வையிட்டனர்.
இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் வடபட்டினம் ஊராட்சியில், மழை வெள்ளதால்பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். வெள்ளப் பாதிப்புகளை எடுத்துரைக்கும் விதமாக நெற் விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர்சேதங்களை குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைமற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிடும் வகையில் புகைப்படக்கண்காட்சியும்அமைக்கப்பட்டிருந்தது. இப்புகைப்படக்கண்காட்சியினை மத்திய குழுவினர் பார்வையிட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பாதிப்பு விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.
செங்கந்லபட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் வேளாண் மற்றும்தோட்டக்கலைத் துறையின் மூலம் பயிர்கள் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளின் நீரின் கொள்ளளவுஅதிகரித்துள்ளது எனவும், முழு கொள்ளளவை எட்டியுள்ள ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டஉபரி நீரால் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வெளியேற்றி பாதுகாப்புமையங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்களானகுடிநீர், உணவு, மின்சாரம், வேட்டி, சேலைகள், பாய், தலையணை மளிகைப்பொருட்கள், சமையல் சிலிண்டர், மெழுகுவர்த்திகள், கழிப்பறை வசதிகள் உள்பட அனைத்து அடிப்படைவசதிகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் சார்பாகஎடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்டபாதிப்புகள் குறித்தும் மத்திய குழுவிடம் விளக்கப்பட்டது.