வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களில் ரூபாய். 244.59 கோடி மதிப்பிலான பணிகளின்முன்னேற்றம் குறித்து வனத்துறை கூட்ட அரங்கில்இன்று (31.10.2022) மாண்புமிகு வனத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அலுவலர்களுடன்ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு..ஸ்டாலின்  அவர்கள்  தமிழகத்தில் வனங்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றார்.

 நடப்பாண்டு வனத்துறை மேம்பாட்டு பணிகளுக்காக மூலதனம் மற்றும் வருவாய் செலவின நிதி ஒதுக்கீடு மூலம் ரூபாய். 244.59 கோடியும், அரசு நிதி ஒதுக்கீடு ரூபாய். 25 கோடியும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மேம்பாட்டிற்கு ரூபாய். 26.58கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. தீ தடுப்பு பணிகளுக்கு ரூபாய். 4.18 கோடியும், வன விலங்குகள் பாதிப்பு நிவாரண பணிகளுக்கு ரூபாய். 340.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு திட்டத்தின் மூலம் காடுகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூபாய். 143.69 கோடியும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மேற்கொள்ளவும் சரியாகதிட்டமிட வேண்டும் எனவும் அலுவலர்களுக்குமாண்புமிகு வனத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அறிவுரைகள்வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத்தலைவர்) திரு.சையத் முஜம்மில் அப்பாஸ், ...,  முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (கேம்பா) திரு.சுப்ரத் மஹபத்ரா              ..., கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர்கள் மற்றும்அலுவலர்கள் கலந்து கொண்டு பணிகளின் முன்னேற்றம்குறித்து தெரிவித்தார்கள்.