கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள்/ இணை இயக்குநர்கள்/ தலைமைகணக்கு அதிகாரிகள் மற்றும் உதவி கணக்குஅலுவலர்கள் ஆகிய தரத்தில் உள்ள சுமார் 700 அதிகாரிகளை பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள்மற்றும் வாரியங்களுக்கு நிதிக் கட்டுப்பாட்டாளர்கள்/ நிதிஆலோசகர்கள்/ தலைமை கணக்கு அதிகாரிகளாகப்பணியமர்த்துகிறது.
அதிகாரிகளின் பொறுப்புகளில் நிதிச்சேவைகளைக் கையாளுதல், கணக்குகளை இறுதிசெய்தல், உள் தணிக்கை செய்தல், பட்ஜெட் தாக்கல்செய்தல், வரி அறிக்கை தாக்கல் செய்தல், சட்டப்பூர்வகடமைகள் போன்றவை அடங்கும். இந்த அதிகாரிகளின்திறன்களை மேம்படுத்த, தொடர்ச்சியான அறிவுபரிமாற்றம் தேவைப்படுகிறது. டெக்னோ-மேனேஜிரியல்பயிற்சி என்பது அதிகாரிகளின் தொழில்முறைதிறன்களை மேம்படுத்துவதற்கு முக்கியமாகும்.
கருவூலம் மற்றும் கணக்குத் துறை மற்றும்நிதித்துறையில் உள்ள பிற துறைகளின் அதிகாரிகளின்திறன்களை மேம்படுத்துவதற்கு முதன்மையானதொழில்முறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்மிகவும் உதவியாக இருக்கும்.
இது தொடர்பாக, இன்று 20.12.2022மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறைஅமைச்சர் முனைவர். பழனிவேல் தியாக ராஜன்,முன்னிலையில், கருவூலம் மற்றும் கணக்குத் துறைஆணையர் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள்நிறுவனத்தின் செயலர் ஆகியோருக்கு இடையேதலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், நிதித்துறை அரசு கூடுதல்தலைமைச் செயலாளர், திரு.என்.முருகானந்தம், இ.ஆ.ப., கருவூலம் (மற்றும்) கணக்குத்துறை ஆணையர் திரு.கே.விஜேயந்திர பாண்டியன்,இ.ஆ.ப., இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் சி.எ.ஜெய்குமார் பத்ரா, நிதி மற்றும் கருவூலம்மற்றும் கணக்குத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும்இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.