சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு

சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று(20.12.2022) மாண்புமிகுபொதுப்பணித்துறை அமைச்சர் திரு...வேலு, மாண்புமிகு. தொழில்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகுஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகிய அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைநடத்தினார்கள்.

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு...வேலு அவர்கள், தலைமையில், இன்று (20.12.2022) சென்னை, தலைமைச்செயலகத்தில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின்ஆட்சேபணை குறித்து, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மற்றும் மாண்புமிகு ஊரகத்தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியஅமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைநடத்தினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் 7 வருவாய்கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 வருவாய்கிராமங்கள் மொத்தம் 13 வருவாய் கிராமங்களில் சென்னைபுதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு நிலம்கையகப்படுத்தும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள்அவர்களுடைய நிலத்தினை கையகப்படுத்த ஆட்சேபணைதெரிவித்ததால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு...வேலு அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசுஅவர்கள் மற்றும் மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர்திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர்களிடம் விவசாயிகளை நேரிடையாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தும்படி ஆணையிட்டார்கள்.  அதனை தொடர்ந்து, 15.10.2022 அன்றுதலைமைச் செயலகத்தில், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த,                            திரு..சரவணன், திரு..இரவிச்சந்திரன், திரு.து.கதிரேசன். திரு.செ.கருணாகரன், திரு..கணபதி,திரு..சுப்பிரமணியன், திரு.வெ.முனுசாமி,திரு.லோ.இளங்கோ ஆகிய விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைநடத்தினார்கள்.

அப்போது, ஏகனாபுரம்  கிராமமே ஒரு சமத்துவபுரமாகஉள்ளது. எங்கள் கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும்.  அதற்கான வழியினை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,  ஒருவரும்பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்காகத்தான் வாழ்வாதாரத்திற்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திகொடுக்கவும், சந்தை மதிப்பிற்கு 3.5 மடங்கு இழப்பீடுகொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள் என தெரிவித்ததோடு, கிராம மக்களின் கோரிக்கையை, மாண்புமிகு முதலமைச்சர்அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றுமாண்புமிகு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள், 17.10.2022 அன்று அவர்களுடைய கோரிக்கையினைவலியுறுத்தி, மேற்கொள்ள இருந்த நடைபயணத்தைகைவிட்டனர்.  இருப்பினும் அவர்களுடைய கோரிக்கையை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்தனர் இந்நிலையில்அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர் குழு முடிவுசெய்ததின் அடிப்படையில், இன்று (20.12.2022) தலைமைச்செயலகத்தில் மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைநடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், ஏகனாபுரம் கிராமத்தைச்சேர்ந்த .சரவணன், லோ.இளங்கோ, .ரவிச்சந்திரன், து.கதிரேசன், .சுப்பிரமணி .கணபதி, .பலராமன், வெ.முனுசாமி, செ.கருணாகரன், கொ.ஜெயக்குமார் ஆகியவிவசாயிகள் பேச்சு வார்த்தையில் கலந்துக் கொண்டார்கள்.

ஏகனாபுரம் கிராமத்தில் நில எடுப்பு செய்யாமல்தவிர்க்கும்படியும், விவசாய நிலம் பாதிக்காத வகையிலும், நீர்நிலைகள் பாதிக்காத வகையிலும், விமான நிலையம்அமைக்கப்பட வேண்டுமென்றும் பேச்சு வார்த்தையில் கலந்துக்கொண்ட விவசாயிகள் கேட்டுக்கொண்டார்கள்.

விமான நிலையம் அமையவுள்ள இடம் மற்றும் அதன்புவியியல் மாற்றம் நீரியல் அமைப்பு குறித்து சம்பந்தப்பட்டவல்லுநர்குழு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியதன்அவசியத்தை அமைச்சர்கள் ஏகனாபுரம் விவசாயிகளுக்குவிளக்கி கூறினார்கள். ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவிவசாயிகள் இதனை ஏற்றுக் கொண்டு முழு ஒத்துழைப்புவழங்குவதாக தெரிவித்தார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வப் பெருந்தகை, தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், திரு.எஸ்.கிருஷ்ணன், ..., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப.,  காஞ்சிபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மரு. ம.சுதாகர் ஆகியோர் பங்கு பெற்றனர்.