சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும்பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை உள்ளமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க, இன்று (20.12.2022) தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள்மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம்மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என். கயல்விழி செல்வராஜ் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின்தற்போதைய நிலை குறித்து மாண்புமிகு அமைச்சர்அவர்களால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வறிவிப்புகளை விரைவாக மக்களின் பயன்பாட்டிற்குகொண்டு வரவும், இத்திட்டங்களின் பயன் அவர்களை விரைந்து சென்றிடுவதை உறுதி செய்திடத் தேவையானநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு தென்காசி சு ஜவஹர் இ ஆ ப, ஆதிதிராவிடர் நல இயக்குநர் திரு.டி..ஆனந்த் இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு. கே.எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப., பழங்குடியினர் நலஇயக்குநர்
திரு. எஸ் அண்ணாதுரை, ம.தொ.ப., சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு உதவி காவல்துறைத் தலைவர் திருமதி பி.ஆர். வெண்மதி, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.