தேசிய இளையோர் நாடாளுமன்றப் போட்டிகள் வருங்கால தலைமுறைகளின் ஜனநாயக பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும்: தமிழக அமைசசர் திரு. மனோ தங்கராஜ்

தேசிய இளையோர் நாடாளுமன்ற இறுதி போட்டிகள் கடந்த மார்ச் 2, 3 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில்கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி. சுப்ரியா, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி. வைஷாலிமற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வி. ஞான சௌந்தரி ஆகியோர் வென்றுள்ளனர். இதைமுன்னிட்டு இந்த ஆகியோர் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும்  டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  திரு. மனோ தங்கராஜிடம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெற்றிச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். இது குறித்து அமைசசர் திரு. மனோ தங்கராஜ் கூறுகையில், நேரு யுவகேந்திரா ஏற்பாடுசெய்திருந்த தேசிய இளையோர் நாடாளுமன்ற நிகழ்வில் தமிழகத்திலிருந்து கள்ளக்குறிச்சி, விருதுநகர்மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாணவிகள் பரிசுகளை வென்றுள்ளனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில்நடைபெற்ற இறுதிப்போட்டியில் பரிசுகளை வென்று வந்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய இளையோர் நாடாளுமன்ற நிகழ்வு ஒரு சிறப்பான விஷயம். இதன் மூலம் சாதாரண பொதுமக்கள், ஜனநாயக அமைப்பில் தங்களுக்கு ஏற்படும் குறைகளை குறித்து எப்படி குரல் கொடுக்க முடியும் என்பதுகுறித்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு என்கிறார். மேலும் மக்கள் பிரச்சினைகளை மக்களிடம்சென்று அறிந்து அவர்களின் குரலாக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த வாய்ப்பை இது ஏற்படுத்திகொடுத்துள்ளது என தெரிவித்தார். தேசிய இளையோர் நாடாளுமன்றம் போட்டி நடத்துவதன் மூலம் வருங்கால தலைமுறைகளின் ஜனநாயகப் பங்களிப்பை ஏற்படுத்த உகந்த முயற்சி எனக் கூறினார். இந்த நிகழ்வில் நேருயுவ கேந்திரா தமிழ்நாடு & புதுச்சேரி இயக்குநர் திரு. செந்தில்குமார் உடன் இருந்தார்.