தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு

கொரோனா நோய்த் தொற்று பரவலைக்குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின்உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ்கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குநடைமுறையில் இருந்து வருகிறதுதற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்றுகாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில்மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்துகட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்டசெயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடைவிதிக்கப்படுகிறதுமாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

• மத்திய  உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிரசர்வதேச விமான போக்குவரத்து
• திரையரங்குகள்
• அனைத்து மதுக்கூடங்கள்
• நீச்சல் குளங்கள்
• பொது மக்கள் கலந்து கொள்ளும்சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
• பொழுதுபோக்குவிளையாட்டுகலாச்சாரநிகழ்வுகள்
• பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 
• உயிரியல் பூங்காக்கள்
• நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகதிருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர்
• இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிரஅனைத்துபகுதிகளிலும்ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளசெயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.மேலும்ஏற்கனவே இரவு 8.00 மணி வரைசெயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும்செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும்பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும்அனுமதிக்கப்படுகின்றன. 

➢ புதுச்சேரிக்கான பேருந்து சேவைதொடங்கப்படுகிறது.
➢ ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின்வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுநெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதிஅளிக்கப்படுகிறதுஇதுகுறித்த விபரங்களைதேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாகமாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
➢ உணவகங்கள்தேநீர் கடைகள்அடுமனைகள்(Bakery), நடைபாதைக் கடைகள்இனிப்புகாரவகை பண்டங்கள் விற்பனை கடைகள ஆகியவை வழக்கமானநிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகிதவாடிக்கையாளர்களுடன் இரவு மணிவரைசெயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள்மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில்கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டுநடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

➢ கடைகளின் நுழைவு வாயிலில்வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கைசுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடுஉடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).   
➢ கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
➢ குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும்இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள்திறக்கப்பட்டு போதுமான காற்றோட்டவசதியுடன் செயல்படுவதோடுகடைகளில்சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியானநபர்களை அனுமதிக்கக்கூடாது.  
➢ கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போதுஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கானவழிமுறைகள்

• நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviourஆகியகோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
• கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில்நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்துநிலையானவழிகாட்டு நடைமுறைகளின்படிதீவிரமாகநோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில்கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். 

• நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர,  இதரசெயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
• நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்நோய்த் தொற்று பரவலை கண்காணிக்ககுழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்புடைய துறைகள்  கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 

 கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தபொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்துவெளியில் வருவதையும்கூட்டம் கூடுவதையும்தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும்கொரோனா மேலாண்மைக்கானதேசிய வழிகாட்டு நடைமுறைகளில்குறிப்பிட்டுள்ளபடிபொது இடங்களில் முகக்கவசம் அணிவதுசமூக இடைவெளியினைகடைபிடிப்பதுகைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதுஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும்நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன்பொதுமக்கள் உடனே அருகிலுள்ளமருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனைசிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா நோய்த் தொற்றுமேலாண்மைக்கான விதிமுறைகள்கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டுவிதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம்விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்குஅளித்த ஒத்துழைப்பின் காரணமாகவேநோய்த்தொற்று குறைந்து வந்துள்ளது என்பதைமனதில் கொண்டு தொடர்ந்து அரசின்நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிகொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிடவேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.