தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும் (22.5.2023) செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர், சென்னை வெளிவட்டச் சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை தேர்வு செய்வது தொடர்பாகவும், முடிச்சூர், சீக்கனான் ஏரியை ரூ.2கோடிமதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், முடிச்சூர், இரங்கா நகர் குளத்தினை ரூ.1. 50 கோடிமதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல், ஈஸ்வரி நகரில்ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைப்பது தொடர்பாகவும், பெருநகரசென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், புது தெருவில் ரூ.10கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயநலக்கூடம் அமைப்பது தொடர்பாகவும் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வுமேற்கொண்டார்கள்.
அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னைபெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில்
50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகரபகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு(22.5.2023) 28 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம். மீதமுள்ள 6 இடங்களையும் இந்த மாதஇறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.
மேம்பாலங்களுக்கு கீழிருக்கின்ற பகுதிகளை அழகுபடுத்துதல், உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல், வகுப்பறைகள் கட்டித் தருதல், திருமண மண்டபங்கள் ஏற்படுத்தி தருதல், அதோடு சலவைக் கூடங்களைமேம்படுத்தி தருதல், பேருந்து முனையங்களை மேம்படுத்தித் தருதல் என்று பல்வேறு வகையானபணிகளை இந்த 34 பணிகளில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பார்வையிடுகின்ற பணிகள்சுமார் ரூ.2 கோடி செலவில் முடிச்சூர் சீக்கனான் ஏரியை மேம்படுத்துதல், அதோடு ரூ.1.50 கோடிசெலவில் முடிச்சூர், ரங்கா நகர் குளத்தை மேம்படுத்துதல், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர்அவர்களுடைய பகுதியில் ரூ.2 கோடியில் பம்பல், ஈஸ்வரி நகரில், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலைமேம்படுத்துதல், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்திரு.தா.மோ.அன்பரசன் அவர்களுடைய தொகுதியான ஆலந்தூர், புதுத்தெருவில் ரூ.10 கோடிமதிப்பீட்டில் ஒரு திருமண மண்டபத்தை ஏற்படுத்தி தருதல் ஆகிய பணிகளை இன்றைக்கு மேற்கொள்ளஇருக்கின்றோம்.
ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்ட இந்த 34 பணிகளையும் மூன்று மாதத்திற்குள்ளாக இந்த பணிகளைதுவக்கிட வேண்டி திட்டமிட்டு, தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்றோடு 28 பணிகளுக்கான ஆய்வு நிறைவு பெறுகின்றது. மீதம் இருக்கின்ற 6 இடங்களையும் இந்த மாதஇறுதிக்குள்ளாக ஆய்வு செய்து முடித்து அவைகளையும் பணிகளை துவக்குவதற்குண்டான அனைத்துபணிகளையும் விரைவுபடுத்தக் கேட்டுக்கொண்டிருக்கிறாம். அதேபோல, தனியார் ஆம்னி பேருந்துகளைநிறுத்துவதற்குண்டான இடத்தை இன்று (22.5.2023) முடிச்சூர், சென்னை வெளிவட்டச் சாலையில்சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.29 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பொறுத்தவரையில் முன்னதாக இந்த முனையத்திற்கு வரும்பேருந்துகளின் போக்குவரத்தை கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த பேருந்துநிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது என்னன்ன அடிப்படைத் தேவைகள் என்றுஒவ்வொன்றையும் ஆய்வு செய்கின்ற போது அந்த மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும்கணக்கிடாமல் இந்த பேருந்து முனையம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இந்த பேருந்துநிலையத்திற்கு உண்டான அணுகு சாலைகள், அதேபோல் இந்த பேருந்து நிலையத்திற்கு வருகின்றபோக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றைவகளை கணக்கிட்டுஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம். ஜூன் மாத இறுதிக்குள் இதை துவக்க வேண்டுமென்றநிலைபாடு இருந்தாலும், பேருந்து முனையம் துவக்கப்பட்ட பிறகு மக்களுடைய தேவைகள் எவையும்விட்டுவிடாமல் மக்களுடைய பயன்பாட்டிற்கு வருகின்ற போது மக்களுடைய அடிப்படைத் தேவைகளைநிறைவேற்றுவதற்குண்டான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்பாடு செய்வதற்கு ஜூன் மாதத்திற்குள்முடிந்த அளவிற்கு ஏற்பாடுகளை முடித்து, பேருந்து நிலையங்களை திறப்பதற்குதிட்டமிட்டிருக்கின்றோம் அல்லது ஓரிரு வாரங்கள் தள்ளிப்போனாலும் ஜூலை மாத இறுதிக்குள்ளாகநிச்சயமாக இந்த பேருந்து முனையத்தை திறப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் நிறைவுசெய்வோம்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தைத் திறப்பதற்குண்டானப் பணிகள் குறித்து தொடர்ந்து தினந்தினம்வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்களும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்களும் மற்றும் இத்துறை அதிகாரிகளுடன் இதுசம்பந்தமாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, புதிது புதிதாக தேவைப்படுகின்ற கட்டுமானப் பணிகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம். ஆகவே, குறிப்பிட்டக் காலத்திற்குள்ளாக வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைத்துத்தரப்படும். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சூல்மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (தாம்பரம்) திரு.எஸ்.ஆர்.ராஜா அவர்கள், (பல்லாவரம்) திரு.இ.கருணாநிதி அவர்கள், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் திரு.கோ.காமராஜ்அவர்கள், ஆணையாளர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், பம்மல் மண்டலக் குழுத் தலைவர்திரு.வே.கருணாநிதி அவர்கள், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலக் குழுத் தலைவர், திரு.சந்திரன் அவர்கள், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.மேனுவல்ராஜ் அவர்கள், முதுநிலைத் திட்டஅமைப்பாளர் திருமதி.அனுசுயா அவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.