தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் சார்பாக 100 ஈர நிலங்களில் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.115.15 கோடி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு. வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்திலுள்ள ஓட்டேரிஏரியில் இன்று (05.06.2023) உலக சுற்றுச்சூழல் நாள் விழாவையொட்டி தமிழ்நாடு ஈர நிலங்கள்இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினமான இன்று தமிழ்நாடு ஈரநில இயக்கம்மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் அவர்களால் மாண்புமிகு குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் முன்னிலையில்தொடங்கி வைக்கப்பட்டது. இந்த தொடக்க விழாவின் அடையாளமாக வண்டலூர் அறிஞர் அண்ணாஉயிரியல் பூங்காவில் அமைந்துள்ள ஓட்டேரி ஏரியின் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் தொடங்கிவைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். ஓட்டேரி ஏரியில் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு திட்ட பணிகளை தொடங்கி வைத்து மாண்புமிகுவனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் 100 சதுப்புநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவை சதுப்பு நிலத்திற்கு சொந்தமான துறைகள், தன்னார்வதொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள், மாணவர்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்துஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தின் (IMP) அடிப்படையில் வரைபடமாக்கப்பட்டு சூழலியல் ரீதியாகமீட்டெடுக்கப்படும்.

 சமீபத்தில் 2022 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 13 புதிய ராம்சார்தளங்களைப் பெற்றுள்ளது, இது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களான ராம்சார் தளங்களின்நாட்டில் உள்ள 75-ல் 14 எண்ணிக்கையை கொண்டுள்ளது. இதில் ஓட்டேரி ஏரி சுமார் 0.91 சதுர கி.மீ நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது, மேலும் இதுஉயிரியல் பூங்கா பகுதி மற்றும் அதை ஒட்டிய வண்டலூர் காப்புக்காடு வழியாக செல்லும் கால்வாய்களில்இருந்து தண்ணீர் பெறுகிறது. ஏரியின் நீர் பரப்பளவு 16 ஏக்கர் பரப்பளவில் 2.22 மில்லியன் கன அடிசேமிப்புத் திறன் கொண்டது, ஏரிப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள மரங்களிலும் சுமார் 12 வகையானபறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த ஏரியின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பின் நோக்கம், நீர்சேமிப்பு திறனை அதிகரிப்பதாகும், இதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பல்லுயிர்நிலையுடன் குடியிருப்பு மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடத் தரம் மேம்படும். ஈர நிலங்கள் இயக்கத்தின் கீழ், உள்ளூர் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும்மாணவர்களின் தீவிர ஈடுபாட்டுடன் ஈரநிலங்களின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உள்ளூர் பல்லுயிர்களைப்பாதுகாத்தல் மற்றும் நீர் பிடிப்பு திறன், நீர் சுத்திகரிப்பு, உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தைமேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்வழிகாட்டுதலின்படி, இந்த இயக்கத்தினை மக்கள் இயக்கமாக மாற்ற, தமிழ்நாடு ஈர நில இயக்கத்தின்கீழ் இதுவரை 187 ஈர நில  நண்பர்கள் பதிவு செய்துள்ளனர். இயக்கத்தின் தொடக்க விழாவின்போது 5 ஈர நில நண்பர்களுக்கு அவர்களின் ஆண்டு முழுவதும் ஏரி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக வெகுமதிஅளிக்கப்பட்டது. சமூகப் பங்கேற்புடன் அனைத்து 100 ஈர நிலங்களின் சூழலியல் மறுசீரமைப்பில்ஈடுபடுவதற்கு இது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஊக்குவிக்கும் என்றுஅமைச்சர் தெரிவித்தார். ஈர நிலங்களின் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்த மக்களின்விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அனைத்து ஈரநிலங்களிலும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள்ஊக்குவிக்கப்பட வேண்டும், இதனால் இந்த இயற்கை சொத்துக்கள் நீண்டகால அடிப்படையில்பாதுகாக்கப்படுகின்றன.

 இந்த விழாவில் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் திருமதி .வரலட்சுமி மதுசூதனன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருமதி.சுப்ரியாசாஹு, ...,  மாவட்ட ஆட்சியர், திரு... ராகுல் நாத், ..., முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) திரு.சுப்ரத் மஹாபத்ர, ..., முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் திரு.சீனிவாஸ் . ரெட்டி, ..., கூடுதல் முதன்மைதலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ் நாடு ஈர நில இயக்க உறுப்பினர் செயலர், திரு.தீபக்ஸ்ரீவஸ்தவா, ..., செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் திருமதி உதயா கதிரவன், தன்னார்வ தொண்டு நிறுவனநிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழாவில் தமிழ்நாடு ஈரநில இயக்கம் தொடர்பான ஆவணப்படம், தகவல் கையேடு வெளியிடப்பட்டது.