சமூக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கட்டமைப்பு பொரியியலின் முக்கியப் பங்கு

CSIR கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில், 2023 ஜூன் 5 முதல் ஜூன் 10 வரை   தொழில்துறை மற்றும் புத்தொழில் நிறுவன  சந்திப்பு, மாணவர்கள் இணைவது, சமூகம் இணைவது, தொழில்நுட்பங்களின் காட்சிபடுத்துதல்  போன்ற நீண்ட நிகழ்வுகளை  நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் நாளில் (5 ஜூன் 2023),  சமூக இணைப்பு என்ற முனைப்பில்மூலம் சமூகத்தின் நலனுக்காக CSIR-SERC செய்த ஆராய்ச்சி பங்களிப்புகளை வெளிப்படுத்தும்வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அறிவுப் பகிர்வு, தொழில்நுட்பசெயல்விளக்கம் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் சமூகத் தேவைகளுக்கு இடையே உள்ளஇடைவெளிகளை கருத்து விவாதங்கள் மூலம் அடையாளம் காணும் தளத்தை வழங்குகிறது. கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களின்அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, நாட்டின் உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்த திறம்படபங்களிக்க உதவும் கருத்துகள் மற்றும் தேவைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 சென்னை, CSIR-SERC, விஞ்ஞான் ஆடிட்டோரியத்தில் காலை 9:30 மணிக்கு தொடக்க விழாவுடன்நிகழ்ச்சி தொடங்கியது. தென்னக ரயில்வேயின் முதன்மை தலைமைப் பொறியாளர் திரு  தேஷ் ரத்தன்குப்தா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரு  யு.எஸ்.பி. யாதவ், துணைஇயக்குநர் ஜெனரல் (தெற்கு மண்டலம்), இந்திய தரநிலைகள் பணியகம் கெளரவ விருந்தினராககலந்துகொண்டு உரையாற்றினார்.  நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குத்து விளக்கு ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. CSIR-SERC இன்இயக்குநரும், CSIR மெட்ராஸ் வளாகத்தின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான முனைவர் N. ஆனந்தவல்லி வரவேற்புரையாற்றினார், அதில் அவர் ஒரு வாரம் ஒரு ஆய்வக பிரச்சாரத்தின் தனித்துவம்குறித்து சுருக்கமாகப் பேசினார், மேலும் இன்றைய நிகழ்வு CSIR-SERC இன் குறிப்பிடத்தக்க சமூகபங்களிப்பை வெளிப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.. CSIR-SERC இன் தோற்றம் மற்றும் அதன்தொடக்கத்தில் இருந்து நாடு மற்றும் சமூகத்திற்கு அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் குறித்தும்அவர் சுருக்கமாக பேசினார். பாலங்கள், நெடுஞ்சாலைகள், சுரங்கப்பாதைகள், துறைமுகங்கள்போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பில் கட்டமைப்புபொறியியலின்  முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனால் போக்குவரத்துமற்றும் தகவல் தொடர்பு மேம்படுத்தப்படுகிறது, இது மேம்பட்ட சமூக மற்றும் பொருளாதாரஇணைப்பை வழங்குகிறது. நிலையான தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கட்டமைப்பு பொறியியலில் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் சமூகம் செழித்துமுன்னேற முடியும் என்றார். CSIR-SERC, அதன் சாதனைகள் மற்றும் அதன் கடந்த 58 ஆண்டுகளில்சமூகம் மற்றும் தேசத்திற்கான முக்கிய பங்களிப்புகள் பற்றிய ஒரு சிறிய வீடியோபங்கேற்பாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.  CSIR-SERC இன் முதன்மை விஞ்ஞானி முனைவர்ஜே.ராஜாசங்கர், சொசைட்டி கனெக்ட் நிகழ்வு மற்றும் அதன் நோக்கங்கள் குறித்துபங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.

CSIR-SERC முதன்மை விஞ்ஞானி முனைவர் பாரிவள்ளல், விருந்தினர்களை  அறிமுகப்படுத்தினார், திரு  யாதவ், தனது உரையில், இந்த பிரச்சாரத்திற்காக CSIR மற்றும் CSIR-SERC ஐப் பாராட்டினார், மேலும் சொசைட்டி கனெக்ட் ஒரு மிக முக்கியமான பாடமாகும், ஏனெனில் சமூகத்துடனானதொடர்பை இழக்கும் எந்தவொரு அமைப்பும் விரைவில் அல்லது பின்னர் அதன் முக்கியத்துவத்தைஇழக்கும் என்றார். சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், அது இல்லாமல் எந்தவொரு அமைப்பும் நிலைத்திருக்க முடியாது. இந்திய தரநிலைகள் பணியகம்(பிஐஎஸ்) பற்றி விளக்கமளித்த அவர், பிஐஎஸ் ஆராய்ச்சி நிறுவனங்களை தரநிலைகள் மூலம்சமூகத்துடன் இணைக்கிறது என்றார். சந்தை மற்றும் சமூகத்தில் தரநிலைகள் வகிக்கும் பங்கையும்அவர் எடுத்துரைத்தார், மேலும் CSIR-SERC ஆனது BIS ஆல் கொண்டுவரப்பட்ட கட்டமைப்புபொறியியல் தரநிலைகளில் கிட்டத்தட்ட 70-80% பங்களிப்பதாகவும், தேசிய கட்டிடக் குறியீட்டில்CSIR-SERC முக்கிய பங்களிப்பாளராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். நீடித்தத்தன்மை, வளங்களைப்பாதுகாத்தல் மற்றும் கார்பன் தடயத்தைக் குறைத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர்வலியுறுத்தினார். தலைமை விருந்தினர் திரு  தேஷ் ரத்தன் குப்தா தனது உரையில் CSIR-SERC என்பது CSIR இன்முக்கியமான தேசிய ஆய்வகம் என்றும், அதன் சேவைகள் இந்திய ரயில்வே மற்றும் பல்வேறு பொதுமற்றும் தனியார் துறை நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கட்டமைப்புசுகாதார கண்காணிப்பின் முக்கியத்துவம் குறித்து சுருக்கமாகப் பேசிய அவர், கட்டமைப்புகள் மற்றும்கட்டமைப்பு கூறுகளின் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் மதிப்பீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்று கூறினார். ரயில்வே பாலங்களின்  மதிப்பீட்டில் CSIR-SERC விரிவான பங்களிப்பைவழங்கியுள்ளதாகவும், அதனால் தடையில்லா ரயில்வே நடவடிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பைவழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். பழைய ரயில் பாலங்களின் மதிப்பீடு, பாம்பன் பாலத்தின்சோதனை போன்றவற்றில் CSIR-SERC ஆற்றிய முக்கிய பங்கு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

தலைமை விஞ்ஞானி, திரு  எஸ்.ஜி.என்.  மூர்த்தி, சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சியின் பொது இணைப்புநிகழ்வு மற்றும் சென்னையில் இன்று தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு  செல்லும்   கண்காட்சியின் ஊர்தியை குறித்து சுருக்கமாக குறிப்பிட்டார்.  பொது இணைப்பு நிகழ்வின் இருமொழி கையேட்டை தலைமை விருந்தினர் திரு குப்தா அவர்கள்வெளியிட்டார். CSIR-SERC இன் பங்களிப்பை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, CSIR-SERC இன் குழுவுடன் தமிழ்நாடு முழுவதும் 6 நகரங்களுக்கு (சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோவை, சேலம், வேலூர்) பயணம் செய்து  பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில்கண்காட்சி படுத்தும் வாகனத்தை  தலைமை விருந்தினர் கொடியசைத்து துவங்கி வைத்தபின் வளாகத்தில் CSIR-SERC தொழில்நுட்பங்கள் பற்றிய கண்காட்சிக் கூடங்களைத் திரு  யாதவ்அவர்கள்  திறந்து வைத்தார். மூத்த முதன்மை விஞ்ஞானி முனைவர் அமர் பிரகாஷ் நன்றியுரை வழங்கினார்.