மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன்அவர்களும் மற்றும் மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும் இன்று (3.7.2023 ) பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.15.18 கோடி மதிப்பீட்டில் 13 கிலோ மீட்டர் நீளமுள்ள 81 சாலைகளை சீரமைக்கும் பணிகளையும் மற்றும் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் 84 கட்டிட தொகுப்புகளுக்கிடையே நடைபாதை அமைக்கும் பணிகளையும் ஆக மொத்தம் ரூ-16.90 கோடி மதிப்பீட்டில் 2 பணிகளை தொடங்கி வைத்தனர்.
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பின்னர் தெரிவிக்கையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால்குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதியில் வாழும்மக்கள் கான்கீரிட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த வாரியம் தொடங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாரியத்தின் பணி வீடு வழங்குவது மட்டும் அல்லமக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் வாரியத்தின் பெயரை தமிழ்நாடுநகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றி அமைத்தார்
அதனடிப்படையில் எழில் நகர் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் 21 அடுக்குமாடி தொகுப்புகளில்4032 புதிய வீடுகளும், பெரும்பாக்கம் பகுதி –I 11 அடுக்குமாடி தொகுப்புகளில் 2112 புதிய வீடுகளும் , 40 அடுக்குமாடி தொகுப்புகளில் 3840 புதிய வீடுகளும் , பெரும்பாக்கம் பகுதி –II 97 அடுக்குமாடிதொகுப்புகளில் 9312 புதிய வீடுகளும் ஆக மொத்தம் 19296 குடியிருப்பு வாசிகளின் வசதிக்காகவும் , அவர்கள் போக்குவரத்து எளிதாக சென்று வர ஏதுவாக 13 கிலோமீட்டர் நீளமுள்ள 81 சாலைகளைரூ.15.18 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தல் மற்றும் 84 கட்டிட தொகுப்புகளுக்கிடையே ரூ..1.72 கோடிமதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணிகள் ஆக மொத்தம் ரூ.16.90 கோடி மதிப்பீட்டில் பணிகள்தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா, நீர் தேக்கத் தொட்டி சீரமைக்கும் பணி மற்றும் சட்டப் பேரவையில்அறிவித்தபடி இப்பகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டுவது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுவிரைவில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்றஉறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ், வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு. ந. செந்தாமரைகண்ணன், நிர்வாகப் பொறியாளர் திரு.க.சிவசங்கரன் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.