தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மயிலாப்பூர் தொகுதி, வன்னியபுரம் திட்டப்பகுதியில் ரூ.36.91  கோடி மதிப்பில் கட்டப்படும் 216 புதிய குடியிருப்புகளான கட்டுமான பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன்  (12.7.2023) தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், மயிலாப்பூர் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட வன்னியபுரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.36.91 கோடிமதிப்பிலான 216 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் :தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டவன்னியபுரம் திட்டப்பகுதியில் 1982 ஆம் ஆண்டு 192 அடுக்குமாடி குடியிருப்புகள் 0.87 ஏக்கர் பரப்பளவில்  கட்டப்பட்டது. நீண்ட நாள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்குடியிருப்புகள் சிதலமைடைந்து இருந்தன. கழக அரசு பொறுப்பேற்ற பின் இதில் குடியிருந்த குடியிருப்புதார்களுக்கு ரூ.46 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட்டு குடியிருப்புகள் காலி செய்துகட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தற்போது, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.36.91 கோடி மதிப்பில் 216 புதியகுடியிருப்புகள் கட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 18 மாத காலத்தில், உயர்ந்ததரத்தில் முடிக்கப்பட்டு, இதில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒப்படைக்கப்படும்எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் ..., தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்திரு..வேலு, வாரிய  தலைமை பொறியாளர்  திரு.வே.சண்முகசுந்தரம், அரசு அலுவலர்கள் மற்றும்  வாரியபொறியாளர்கள் உடன் இருந்தனர்