திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், TNHB,பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம் அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், TNHB,பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர்வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில்  நாடாளுமன்றஉறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கு பெற்றவர்களிடம், 27.08.2021 அன்று சட்டப் பேரவையில், “10,000 கி.மீ நீள ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி சாலைகள் படிப்படியாக, மாவட்ட இதரச்சாலைகளாக, தரம உயர்த்தப்படும். முதற்கட்டமாக சுமார் 2000 கி.மீ. நீளச் சாலைகள்,நடப்பாண்டில் தரம் உயர்த்தப்படும்என அறிவிக்கப்பட்டது.  முதற்கட்டமாக, 2000 கி.மீ.  நீளமுள்ள 873 ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகளை, ரூ.2,178கோடி மதிப்பீட்டில், தரம் உயர்த்த, 18.11.2022-ல் அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது,  ிருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, வில்லிவாக்கம்ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலையின் மொத்த நீளம் 2.80 கி.மீ. ஆகும்.

இச்சாலையானது, திருவேற்காடுஅம்பத்தூர் சாலையில் துவங்கி, ஆவடி மாநகர சாலையின்வழியாக, தேசிய நெடுஞ்சாலை 205ல் இணைகிறது. இச்சாலையை, இரு வழிச்சாலையாக தரம்உயர்த்தி, 800 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலையாக மேம்படுத்தப்படஉள்ளது.

மேலும், மழைநீர் கடந்து செல்லும் வகையில், மூன்று இடங்களில் சிறுபாலங்களும்அமைக்கப்படுகிறது. இச்சாலையை தரம் உயர்த்துவதன் மூலம், அன்னனூர் இரயில்வே நிலையம்மற்றும் திருமுல்லைவாயல் இரயில் நிலையங்களுக்குச் செல்லும் போக்குவரத்து நெரிசல்குறையும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கடலோர காவல் படை குடியிருப்பு, ஒன்றியஅரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம், தேசிய பரவு நோயியல் நிறுவனம்(ஐ.சி.எம்.ஆர்) ஆகிய பகுதிகள் பயன் பெறும்.  தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியத்தின்கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை, அரசு சாலைகளாக தரம் உயர்த்திடும், கிராமச் சாலைகள்திட்டத்தினை, 1.7.1972இல் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்தார்.

மக்கள் தொகை 1500க்கும்மேல் உள்ள 3,902 கிராமங்களையும், மக்கள் தொகை1000க்கும்மேல் உள்ள 2,943 கிராமங்களையும், தார் சாலையாக தரம் உயர்த்தி, அரசு சாலைகளாக மாற்றியமைத்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளசாலைகளை, மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்திட ஆணையிட்டார்.  இந்த ஆணையின்விளைவாகவே, தற்போது அயப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட, இச்சாலை நெடுஞ்சாலைத்துறைமூலம் மேம்படுத்தப்படுகிறத  என்று, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதிஅவர்கள், நபார்டு மற்றும் கிராமச் சாலைகள், தலைமைப் பொறியாளர் திரு.எம்.முருகேசன்மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.