முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்தக்கோயம்பேடு அங்காடியில் பண்டிகை பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு சிறப்பு சந்தைஅமைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இவ்வாறான சிறப்பு சந்தை, மலர் அங்காடிக்குபின்புறம் முந்தைய காலத்தில் அமைத்து செயல்பட்ட பொழுது கனி மற்றும் மலர் அங்காடியைசார்ந்த வியாபாரிகள் பாதிப்பு அடைந்ததாக குறிப்பிட்டு இதற்கான தீர்வு கோரினர்.அவர்களுடைய வேண்டுகோளினை ஏற்று “A” ரோட்டில் சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவில்அமைந்துள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் பொங்கல் சிறப்பு சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இச்சிறப்பு சந்தையினை அடையாளம் காணும் வகையில் ஆங்காங்கே பதாகைகள்அமைக்கப்பட்டதோடு ஒலிபெருக்கி மூலமாக அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பும்செய்யப்பட்டு வருகின்றது.
இத்தகைய சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகைக்கான கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சிகொத்து உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இச்சந்தைக்கு கரும்பானது மதுரை, தேனி, பண்ருட்டி, கடலூர் போன்ற பகுதிகளில் இருந்தும்,மஞ்சள் கொத்து கும்மிடிப்பூண்டி, ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்தும், இஞ்சி கொத்துகும்பகோணம், நெல்லூர், போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு சந்தைக்கு சரக்குகளை ஏற்றிவரும் கரும்பு வாகனங்களுக்கு தலாரூ.1,500 எனவும், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்தை ஏற்றிவரும் வாகனங்களுக்கு தலா ரூ.1,000என சந்தை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால்வாகனம் நிறுத்துமிடத்தில் பொங்கல் சிறப்பு சந்தைக்கென கூடுதலாக குடிநீர், கழிப்பறைபோன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதோடு, மேலும் சென்னை பெருநகர காவல்துறையினரின் உதவி கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து சீர் செய்தல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பெய்த பெரு மழையின் காரணமாக 8 மாவட்டங்களில் முழுமையாகபாதிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இந்த விழாக்காலங்களில் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு போலவேஇந்த ஆண்டும் வணிகம் நடந்து கொண்டிருக்கின்றது. போதிய அளவு பொதுமக்களுக்கும்சந்தை நடப்பது ஏற்கனவே நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.இந்த பொங்கல் சந்தை சில்லரை விற்பனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கிய இந்த சந்தை 17ஆம் தேதி வரையில் நடைபெறஇருக்கின்றது. தற்போது வரையில் 350 கரும்பு ஏற்றி வருகின்ற லாரிகளும். 100 மஞ்சள் ஏற்றிவரும் லாரிகளும் இந்த சந்தைக்கு வந்திருக்கின்றது. இந்த சந்தையில் சேருகின்ற குப்பைகளைஅகற்றுவதற்கு 25 தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்தையில்இம்மாதம் 17ஆம் தேதி வரையில் சுமார் 1000 வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தையால் மொத்தமாக வியாபாரம் செய்பவர்களுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும்வணிகம் செய்வதற்கு பேருதவியாக இருப்பதாக வணிகர்கள் மொத்த வியாபாரிகளும் சில்லரைவியாபாரிகளிடமும் தற்போது விசாரித்த அளவில் சிறந்த முறையில் நடைபெறுவதாக அறிவித்துஇருக்கிறார்கள்.
இந்த சந்தைக்கு உண்டான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., அவர்களும்,துறையினுடைய உறுப்பினர் செயலாளர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்களும், கோயம்பேடுசந்தைனுடைய முதன்மை நிர்வாக அலுவலர் திருமதி.மு.இந்துமதி அவர்களும் முழு நேரமும்கண்காணித்து வருகிறார்கள். காவல்துறையும் முழுமையாக ஒத்துழைப்பு தந்து போக்குவரத்துநெருக்கடி/நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு அதிக அளவு காவலர்களை காவல்துறையும்நியமித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பிலும்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களை நியமித்து இருக்கிறோம் என்பதைதெரிவித்துக்கொள்கிறோம். இந்த சந்தையானது 17 ஆம் தேதி வரையில் நடைபெறஇருக்கின்றது.
இந்த பகுதியை பொறுத்தளவில் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்துகின்ற கருத்துருஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. வெகுவிரைவில் இந்த மருத்துவமனையை மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அனுமதியைப் பெற்று அதற்குண்டான நடவடிக்கைஎடுப்போம். நாளை, நாளை மறுநாள் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களிலும் ஒரு மருத்துவமுகாமை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையும் இன்றோ அல்லதுநாளையோ இந்த இடத்திலும் கோயம்பேடு இந்த சிறப்பு பொங்கல் சிறப்புச் சந்தையில்செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சென்னைப் பெருநகரவளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., கோயம்பேடு அங்காடி முதன்மை நிர்வாக அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி செயற்பொறியாளர் ராஜன் பாபுஅவர்கள், உதவி செயற்பொறியாளர் அமுதா மற்றும் சிஎம்டிஏ அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.