பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள், பால் உற்பத்தியாளர்களின்கறவை மாடுகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம்அமைப்பது தொடர்பாக, பாரத் நுண் நிதி நிறுவனம்(BFIL) உடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பாரத் நுண்நிதி நிறுவனமும் (BFIL), இண்டஸ்இண்ட்வங்கியும் தங்களது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதிமூலம் (CSR Fund) பால் உற்பத்தியாளர்களின் கறவைமாடுகளுக்கு கால்நடை மருத்துவர்களின் மூலம்அவர்களின் இல்லத்திற்கே சென்று அவசர சிகிச்சைஅளித்திட சிகிச்சை உள்ளீட்டு மையம் ஆவின்நிறுவனத்தில் அமைக்க ஆதரவையும் ஒத்துழைப்பையும்வழங்கி உள்ளது.
பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்குவழங்கப்படும் சேவைகளை வலுப்படுத்த தற்போதுமாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் திறன் மேம்பாட்டுமையத்தில் சுமார் 25 பணியாளர்களை கொண்டு சிகிச்சைஉள்ளீட்டு மையம் விரைவில் அமைப்பது தொடர்பாகமாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோதங்கராஜ் அவர்கள், பாரத் நுண்நிதி நிறுவனம் சார்பில் திரு. கிஷோர் சாம்பசிவம் அவர்கள் மற்றும் இதரஅதிகாரிகளுடன் இன்று 08.08.2024 கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இந்த சிகிச்சை உள்ளீட்டு மையத்தின் பயனை, கால்நடை மருத்துவரின் உதவியை அவசர காலத்தில்நாடும் பால் உற்பத்தியாளர்கள் முழுமையாக பயன்படுத்திகொள்வது மட்டுமல்லாமல் ஆவின் நிறுவனத்திற்கு இனிவரும் காலங்களில் தொடர்ந்து பால் வழங்கி வருவார்கள். மேலும், பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளின்ஆரோக்கியம் கால்நடை மருத்துவ சிகிச்சை உள்ளீட்டுமையம் மூலம் பாதுகாக்கப்படும்.