சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமையில், 13.06.2024-அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாநில அளவிலான உயர்நிலை குழுவின் இரண்டாவது கூட்டம் 09.12.2024 பிற்பகல் 5.30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில்நடைபெற்றது. இக்கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், சு. முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், பி.கே. சேகர்பாபு, மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர், பூச்சி. S. முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்குழுவில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில்,தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டமனைகளுக்கு பட்டா வழங்குவது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடுசெய்யப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்வது, சென்னை கிராம நத்தம் நிலங்களில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது மற்றும் பெருநகரசென்னை வளர்ச்சி குழும மனையிடங்களுக்கு பட்டா வழங்குதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாநில அளவிலான உயர்நிலை குழுவின் மூலம் வழங்கப்பட்டஅறிவுரைகளின் தொடர்ச்சியாக துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டுநாளது தேதி வரை 72,221 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் வழங்கப்படவேண்டியவீட்டுமனைப் பட்டாக்களை பொதுமக்களுக்கு விரைவாக வழங்க சம்மந்தப்பட்டஅலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.