இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் (04.01.2025) இராயபுரம் மண்டலம், வார்டு-60க்குட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் 2023-24ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டுநிதியின் கீழ், ரூ.25.96 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு கட்டடத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். பின்னர், வார்டு-55க்குட்பட்ட பேரக்ஸ் தெருவில் மூலதன நிதி ரூபாய் 1.54 கோடிமதிப்பீட்டில் பழுதடைந்த விளையாட்டு திடலை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டிபணிகளை தொடங்கி வைத்தனர்.. தொடர்ச்சியாக, வார்டு-55க்குட்பட்ட புனித சேவியர் தெருவில் மாமன்ற உறுப்பினர்மேம்பாட்டு நிதி ரூபாய் 32 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம். வார்டு-57க்குட்பட்ட வால்டாக்சாலை ஜட்காபுரம் பகுதியில் துறைமுகம் சட்டமன்றஉறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.1.07 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதியபல்நோக்கு கட்டடம் ஆகியவற்றினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணைஆணையர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் பி. ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் நவீன், இசட். ஆசாத், மண்டல அலுவலர் டாக்டர் தா.ஃபரிதா பானு, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.