கைத்தொலைபேசியை மையமாக வைத்து ‘ரிங் ரிங்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார்.இப்படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன் சார்பில் ஜெகன் நாராயணன் , சக்திவேல் தயாரித்துள்ளனர். இப்படத்தில் விவேக் பிரசன்னா,சாக்ஷி அகர்வால், டேனியல் அன்னி போப்,பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பதாகையை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்தினார்.