தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல்தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், குழுவின் தலைவர், துணைப் பொதுச்செயலாளர்கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் (23-01-2024) சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாயஅணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.இராஜா, வர்த்தகர்அணி துணைத் தலைவர் கோவி.செழியன், மாநிலங்களவை கழக உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., அயலகஅணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, எம்.பி., மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன்நாகநாதன், எம்.எல்.ஏ., வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.