2019 ம் ஆண்டு ஊதிய உயர்வுக்காக போராடிய அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற மறுப்பது ஏன் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு கேள்வி எழுப்பியுள்ளது*.
ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை கலையக்கோரி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மருத்துவம் படித்து அரசின் தேர்வு முறைகளில் தேர்ச்சியடைந்து அரசு மருத்துவர்களாக பணியாற்ற வருபவர்களுக்கு நாடு முழுவதும் ஒரேவிதமான ஊதியமே கொடுக்கப்படுகிறது. ஆனால் சட்ட பிரிவு 354 ல் உள்ளது படி ஊதிய பட்டை நான்கை நிறைவேற்றாமல் தற்போதை அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக அரசு மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதே ஊதிய உயர்வுகோரிக்கையை முன்வைத்து கடந்த 2019 ல் தொடர் போராட்டங்களை நடத்தியபோது, அப்போதைய எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் எங்களுடன் போராட்ட களத்துக்கு வந்து, நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்தது 100 நாட்களாகியும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் பழைய ஊதியமே தொடரும் என்றும் 293 சட்ட விதியே தொடரும் என்று அறிவித்தது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், கொரோனா 3 ம் ஆலை வரவுள்ள நிலையில், மருத்துவர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய உயர்வு கிடைத்தால், மேலும் அவர்கள் உற்ச்சாகமாக சேவை செய்வார்கள் என்று அரசு மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
( பேட்டி ; பெருமாள் பிள்ளை
அரசு மருத்துவர்கள் சங்கம் )
மக்கலள் தொடர்பு: கேஎஸ்கே செல்வா