தமிழ்நாட்டில் 38,000 க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுவை கட்டுப்படுத்துவதில் மகத்தான சேவையை அவர்கள் செய்துவருகிறார்கள் .ஆனால் அவர்களுக்கு மிக குறைவான தினக் கூலி தான் வழங்கப்படுகிறது .அவ்வப்பொழுது பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். எனவே , அவர்களுக்கு உடனடியாக உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் .
தினக் கூலி என்பதற்குப் பதிலாக, மாத ஊதிய வழங்கிடவேண்டும். குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ 21,000 வழங்கிட வேண்டும். பல ஊராட்சி ,நகராட்சி ,மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகளில் பணிபுரியும் இந்த கொசு ஒழிப்புஊழியர்களுக்கு ,சம வேலைக்கு சம ஊதியம. வழங்கிட வேண்டும் .பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் , அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி …கருத்தரங்கம் சென்னையில் ஆஷா நிவாஷ் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கே.ஜெயவேலு தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.சதீஷ் வரவேற்றார். வழக்கறிஞர் நடராஜன் கருத்தரங்கை தொடங்கிவைத்தார். கோரிக்கைகளை விளக்கி,மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.சாந்திவிளக்கி,விளக்க உரையாற்றினார்.
எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜி.உதயக்குமார், ஆர்.சி.எச் தூய்மைபணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிலாஒளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் நிறைவுஉரையாற்றினார். இக் கருத்தரங்கில் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.