திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 15 க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்புப் பணியாளர்கள் ( DBC workers) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இப்பணியாளர்களுக்கு, உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும். டெங்கு பரவி வரும் காலத்தில் இது போன்ற பணி நீக்கங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது.
* பாளையம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கும், உடனடியாக மீண்டும் பணி வழங்கிட வேண்டும். இதே போன்று ஈரோடு மாவட்டம் ,மதுரை,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பணி நீக்கம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டும். * எட்டு ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த கொசு ஒழிப்பு பணியாளர்களை பணி நீக்கம் செய்து, தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . திண்டுக்கல் மாவட்டம் மருத்துவத் துறையில் நிலவும் ஊழல் முறைகேடுகளை தடுத்திடவும், கொசு ஒழிப்புப் பணியாளர்களை மிரட்டி உயர் அதிகாரிகள் பணம் பறிக்கும் போக்கை தடுத்திடவும்,வழங்கப்படும் தினக் கூலி முழுமையாக கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு கிடைப்பதையும் உறுதி செய்திடவும் வேண்டும்.
* தமிழக அரசு நிர்ணயத்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் , மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. DBC ஊழியர்களுக்கு தினக் கூலி மிகவும் குறைவாக 200 ரூபாய் 300 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. . அகவிலைப்படி வழங்கப்படுவதே இல்லை . * தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி ,நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் பணி செய்யும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தமிழக அரசின் குறைந்தபட்ச ஊதிய வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட 2017 ஆணையின்படி வழங்கிட வேண்டும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு உரிய ஊதியம் சில இடங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அவ்வாறு வழங்கப்பட வேண்டும்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக , 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணய ஆணையை நடைமுறைப் படுத்த வேண்டும்.
* கொசு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு ( DBC workers ) குறைந்தபட்ச தினக் கூலி சட்டத்தின் படி , அரசாணை 2D எண் 62 தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள் 11-10-2017 ன் படி, (Semi skilled Grade I) ஆக வரையறுக்கப்பட்ட அடிப்படையில்
நகராட்சிகளில் ரூ 19503 ம் , மாநகராட்சிகளில் ரூ 21503ம் பேரூராட்சிகளில் ரூ 17503ம் ஊராட்சிகளில் ரூ15503ம் தினக் கூலி வழங்கிட வேண்டும். தினக் கூலித் தொடர்பான அரசாணையை மேலும் கால தாமதமின்றி நடைமுறைப் படுத்திட வேண்டும்.அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்க வேண்டும். * கொசு ஒழிப்புப் பணியாளர்களை கொசு ஒழிப்புப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவத்துறை சார்ந்த வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும். உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகள்,தோட்ட வேலைகள்,சமையல் வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை தடுத்திட வேண்டும்.
* தினக்கூலி முறையை கைவிடவேண்டும். * மாத ஊதியம் வழங்கிட வேண்டும். * கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி, ,திருவண்ணாமலை மாவட்டம் போலூர் போன்ற பல்வேறு இடங்களில் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும்.
* பணி நீக்கங்களை கைவிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். *கொசு ஒழிப்புப் பணியாளர்களை பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணி அமர்த்துவதை கைவிட்டு, இவர்களின் பணிக்கு பொருத்தமான மருத்துவ துறையின் கீழ் மட்டுமே பணியமர்த்திட வேண்டும். இப்பணியாளர்கள் அனைவரையும் மருத்துவத்துறை பணியாளர்களாக, நோய்த்தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்.
* மருத்துவ துறையின் மூலமாகவே இப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி , திண்டுக்கல்லில் செப்டம்பர் 29 ஞாயிறு அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். * தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுத்திட கூடுதல் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். *உலகம் முழுவதும் குரங்கம்மை வேகமாக பரவி வருகிறது. அது தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வரவேற்புக்குரியது. அதில் கூடுதல் கவனத்தை தொடர்ந்து செலுத்திட வேண்டும்.
*தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள்,செவிலியர்கள்,மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். *இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பணி இடங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். * சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மருத்துவமனை பாதுகாப்புக்குழு (Hospital Security Committee) மற்றும் மருத்துவமனையில் விசாக குழு (ICC) கட்டாயமாக அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் , சமூக சமத்துவத்திற்கான
டாக்டர்கள் சங்கத்தின், பொதுச் செயலாளர்
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,