முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று (09.11.2021) திருவள்ளுர் மாவட்டம், ப+ண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தில் உள்ள நீரின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான ப+ண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நீர் தேக்கத்தின் நீர் மட்ட மொத்த 35 அடி ஆகும். மொத்தம் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் ஆகும். தற்போதைய நீரின் கொள்ளளவு 2675 மில்லியன் கன அடி தண்ணீராக உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 3780 கன அடி தண்ணீர் உள்ளே வருகிறது. ஆனால், நீர்த்தேக்கத்திலிருந்து 4996 கன அடி தண்ணீர் வெளியே விடப்படுகிறது. நீர்வரத்தை விட தண்ணீர் வெளியே செல்வது அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், நாளை மற்றும் நாளை மறுதினம் வரலாறு காணாத அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் அடிப்படையில் தற்பொழுது நீர்த்தேக்கத்திலிருந்து 4996 கன அடி தண்ணீர் வெளியே விடப்படுகிறது. அவ்வளவு மழை வந்தால் இந்நீர்தேக்கத்தில் தண்ணீர் காலியாக இல்லையென்றால் கரை உடையும் நிலை ஏற்படும். எனவே, அதன் முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவருடன் கலந்து பேசி எங்களது பொதுப்பணித்துறை இந்த அளவிற்கு தண்ணீரை வெளியேற்றி கொண்டிருக்கிறது. ஆனால் நாளையும், நாளை மறுதினமும் மழை வரவில்லையென்றால் வெளியேற்றிய நீரின் காரணமாக வருத்தமான சூழ்நிலை ஏற்படும். எனவே, மழை வரும் என்ற நம்பிக்கையில் நீர் திறந்து விடப்படுகிறது. சில நேரங்களில் எதிர்பாராத வகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து வேறு திசை நோக்கி சென்றது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தால் மழை வராது. அதுபோல் நடக்காது என்ற நம்பிக்கையிலும், நாளை, நாளை மறுதினமும் வரக்கூடிய மழையை நம்பியும் இந்த அளவிற்கு தண்ணீர் இந்நீர்தேக்கத்திலிருந்து திறந்து விடப்படுகிறது.
இந்த வருடம் கூடுதலாக 100 தடுப்பணைகள் கட்டுவதற்கு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரால் நிலத்தடி நீரை பெருகும். திருவள்ளுர் மாவட்டத்திலும் கூடுதலாக தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கடந்த ஆட்சி காலத்தில் எந்த இடத்திலும் குடிமராமத்துப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. ஆனால் குடிமராமத்து தலைவர் என்ற பெயரை மட்டும் முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பெயர்; போட்டுக்கொண்டனர். அதாவது, 300 ஏரிகள் தூர் வாரப்படும் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். அந்த 300 ஏரிகளின் பெயர் விவரம், எந்தெந்த மாவட்டத்திற்கு எத்தனை ஏரிகள் தூர்வாரப்படும் என கேள்வி என்னால் கேட்கப்பட்டது. 10 முறை கேட்கப்பட்டதற்கு ஒரு முறையும் பதில் சொல்லவில்லை. கடைசியில் திருப்பத்தூர் வடஆற்காடு மாவட்டத்திலிருந்து, செங்கல்பட்டு மதுராந்தகம் வரை உள்ள 108 ஏரிகளை ஒரே ஒரு நபருக்கே டெண்டர் விடப்பட்டது. ஆனால் 108 ஏரிகளை கூட அவர்கள் பார்க்காமல் பில் பாஸ் செய்து பணம் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. ஆற்றின் கரைகள், தரைப்பாலங்கள் உடைந்தது குறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல்கள் கிடைத்த 24 மணிநேரத்திற்குள்ளாக அதனை சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 2011 முதல் 2021 வரையில் 14 முறை முல்லை பெரியார் அணையை பார்வையிட்டதாக தகவல் தெரிவித்தார். அது தொடர்பாக தான் நான் பதிவுகள் இல்லை என்றேன். தற்பொழுது இன்று இந்த ப+ண்டி நீர்தேக்கத்தை நான் ஆய்வு செய்வதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதிவு செய்வார்கள். அதுபோல் பொதுப்பணித்துறையில் எது நடந்தாலும் அதனை பதிவு செய்வார்கள். பொதுப்பணித்துறையில் கடந்த 100 வருடங்களில் ஆய்வு செய்ததற்கான பதிவுகள் இடம் பெற்றிருக்கும். அதனால் 14 முறை சென்றதற்கான தேதியை குறிப்பிடப்பட முடியுமா என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் இல்லை என்கிறார்; என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாய்வின்போது, திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப., ப+விருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சந்திரன், நீர்வள ஆதாரத்துறை (சென்னை மண்டலம்) தலைமை பொறியாளர் திரு.ஜி.முரளிதரன், கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் திரு.சி.பொதுப்பணித்திலகம், கொசஸ்தலையாறு வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் திரு.ஜி.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.