பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டையில் மழை வெள்ள நீர் தேங்கிக் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்கள். உடனடியாக, பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் நாகாத்தம்மன் கோயில் தெருவில் நகராட்சியில் இருந்து மின் மோட்டார் மூலமாக மழை நீரை சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி முயற்சியால் அப்புறபடுத்தப்பட்டது. மற்றும் மணிநாய்கர் தெருவில் மெட்ரோ பைப் உடைப்பு ஏற்ப்பட்டு அதையும் சரிசெய்தார்கள். இவ்விரு வேலைகளையும் 23வது வட்ட திமுக செயலாளர் RK.நாகராஜன் மற்றும் கழக தொண்டர்கள் முன்னிலயில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. அப்பகுதி மக்கள், சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி மற்றும் 23 வது வட்ட திமுக செயலாளர் ஆர்.கே. நாகராஜ் உள்பட திமுக தொண்டர்கள் நகராட்சி ஊழியர்கள் அனைவரையும் பாராட்டினார்கள்