எர்த் அண்ட் ஏர் மற்றும் தி ஐடியா பேக்ட்ரி அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டின் ‘என் சென்னை யங் சென்னை’ விருது வழங்கும் விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தேறியது. சிறந்த படம்: வினோதய சித்தம், சிறந்த இயக்குநர்: சமுத்திரக்கனி (வினோதய சித்தம் படத்துக்காக) சிறந்த நடிகர்: வசந்த் ரவி (ராக்கி படத்துக்காக) சிறந்த நடிகை: அபர்ணதி (தேன், ஜெயில் படத்துக்காக) சிறந்த நடிகர்(விமர்சன ரீதியில்): தருண்குமார் (தேன் படத்துக்காக) சிறந்த எதிர் நாயகன்: மைம் கோபி (மதில் படத்துக்காக) சிறந்த துணை நடிகை: ராதிகா சரத்குமார் (ஜெயில் படத்துக்காக) சிறந்த துணை நடிகர்: தம்பி ராமையா (வினோதய சித்தம் படத்துக்காக) சிறந்த ஒளிப்பதிவாளர்: சுகுமார் (தேன் படத்துக்காக) சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஃபிராங்கிளின் ஜேக்கப் (ரைட்டர் படத்துக்காக) ஆச்சி மனோரமா விருது: கோவை சரளா சார்லி சாப்ளின் விருது: வைகை புயல் வடிவேலு பீம்சிங் விருது: இயக்குனர் இமயம் பாரதிராஜா********
இந்த நிகழ்வில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, ட்ரீம் தமிழ்நாடு நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள்கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விழா பற்றி கூறும்போது, “சென்னையையும், சென்னையின் வளர்ச்சிக்காகவும் உழைத்த மக்களையும் பெருமைப்படுத்தும் நிகழ்ச்சி இது” எனக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.