அதிமுகவின் வெள்ள நிவாரண உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி மு. பழனிசாமி தமிழகத்தில் பெய்துவரும் பெருமழையில் பாதிக்கப்பட்டுள்ள, வடசென்னை மாவட்டம், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களைப் பார்வையிட்டதோடு,

பூம்புகார் நகர், எம்.ஜி.ஆர். நகர், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். ​இந்நிகழ்வுகளின் போது, கழக அமைப்புச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான பொன்னையன், ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் பிரபாகர், வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான நா. பாலகங்கா, வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
வெங்கடேஷ் பாபு  உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.