ஈரா எண்டர்டெய்மெண்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் காணொளி மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வில் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். படத்தின் அனைத்த் நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.