தமிழகத்தில் 188 போலி மருத்துவர்கள் கைது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் போலி மருத்துவர்கள் 188 பேர் பிடிபட்டுள்ளனர். 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.*
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 419 மற்றும் 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கபட்டனர். 2020-21ம் ஆண்டில் 31 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு மருத்துவமனை சட்டம் 2018ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா நெருக்கடி காரணமாக, 2020-21ம் ஆண்டில், 31 பேர் மட்டுமே குழுவினரால் கண்டறிய முடிந்துள்ளது