கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பி.ஆர்.பாண்டியன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தார், கண்காணிப்பு குழு தலைவர் நவீன்குமார் அகியோரை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசினார் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது..
தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணியை சட்டவிரோதமாக செயல்படுத்த கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய அடிப்படையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டில் உள்ளபோது, குறுக்கு வழியில் மத்திய அரசிடம் வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்ய சட்டவிரோதமான அனுமதியைப் பெற்றது. அதனடிப்படையில் தற்போது ரூபாய் 9,000 கோடி மதிப்பீட்டில் புதிய வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதி கேட்டு ஜல் சக்தி துறையிடம் அளித்தது. ஜல் சக்தி துறை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இச்செயல் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தை சிறுமைப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது.எனவே காவிரி மேலாண்மை ஆணையம் வரைவு திட்ட அறிக்கையை உடனடியாக நிராகரிக்க வேண்டும்.

கருகும் குருவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை தொடங்கவும் தற்போது கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள நிலையில் தமிழகத்திற்கு ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையும் பெற்றுத்தர கண்காணிப்பு குழு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். கண்காணிப்பு குழு அலுவலகம் உடனடியாக பெங்களூர் நகரத்தில் ஏற்படுத்திட வேண்டும். மேட்டூர் அணை-சரபங்கா திட்டம் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இதனை தடுத்து நிறுத்திட வேண்டும் காவிரியில் சேலம், நாமக்கல்,கரூர் வரையிலும் ஆற்று கரையோரம் கசிவுநீர் கிணறுகள் அமைத்து பாசனம் என்கிற பெயரில் பெரும் வணிக நோக்கோடு தவறான வகையில் அனுமதி பெற்று உள்ளனர். கடந்த 2019-20 ம் ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 42 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். இத்திட்டம் முழுமையா செயல்பாட்டுக்கு வருமேயானால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா பாதிக்கும். எனவே ஆணையம் அனுமதி இல்லாமல் காவிரியில் சட்டவிரோத நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தமிழக அரசு கடந்தாண்டு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு பதிலளித்த ஹல்தார் தெரிவித்ததாவது.மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கொடுத்திருக்கிற வரைவுத் திட்ட அறிக்கையை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்பதை ஏற்றுக்கொண்டார் அதை நிராகரிப்பது என்பது நான் மட்டும் முடிவெடுக்க முடியாது ஆணையை கூட்டத்தை விரைந்து கூட்டி மாநிலங்கள் உடைய கருத்தை கேட்டு அதை அது குறித்து விரைவில் உரிய மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கொடுத்திருக்கிற வரைவுத் திட்ட அறிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்பதை ஏற்றுக்கொண்டார் அதனை நிராகரிப்பது என்பது நான் மட்டும் முடிவெடுக்க முடியாது ஆணையை கூட்டத்தை விரைந்து கூட்டி மாநிலங்கள் உடைய கருத்தை கேட்டு நிராகரிப்பது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உத்தரவாதம் அளித்தார்.அலுவலகம் உடனடியாக பெங்களூர் நகரத்தில் திறக்கப்பட்டு அனைவருடைய நீர் நிர்வாக அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் தமிழகத்திற்கு மாதாந்திர அடிப்படையில் கிடைக்க வேண்டிய தண்ணீரை கண்காணிப்புக் குழு மூலம் பெற்றுத்தருவோம் விரைவில் தமிழக கர்நாடக பகுதிகளை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார் மேட்டூர் அணையை சரபங்கா திட்டத்திற்கான உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது அதற்கு உரிய பதிலை அனுப்பி வைத்துள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவுபடி ஆணையம் செயல்படும் என உறுதியளித்தார் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு திட்டம் செயல்பாட்டுக்கு இருந்தாலும் அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் இனி ஆணையத்தில் உடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் விரிவுப் அதற்கு செயல்படுத்துவதற்கும் அனுமதிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தார் நிரந்தர தலைவர் தேர்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.