வைரலாகி வரும் சந்தானத்தின் காமெடி “கிக்” படம்

பார்டியூன் பிலிம்ஸ் நவீன் ராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரசாந்த் ராஜ் தயாரிக்கும் “கிக்” படத்தில்  நடிகர் சந்தானம் நடிப்பில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மிகப்பெரும் பொருட்செலவில்,  பிரமாண்டமானசெட்கள், அதிரடி சண்டைகள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுடன் அசத்தலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நாயகி தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்மன்சூர் அலிகான், ஒய்.ஜி. மகேந்திரன், சாது கோகிலா ஆகியோர் நடித்துள்ளார்கள்.**********