ஃபுல் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபாலின் இயக்கத்தில் லிங்கா, ஜம்பிகா, இளங்கோ குமாரவேல், கனிகா ஆகியோரின் நடிப்பில் ஷார்ட்ஃபிலிக்ஸ் இணையதளத்தில் 8 பாகங்களாக வெளிவரும் இணையத்தொடர் ‘பானிபூரி‘. உண்மைக் காதலின் தன்மையை மென்மையாகசொல்லியிருக்கும் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். லிங்காவும்ஜம்பிகாவும் காதலர்கள். இவர்கள் இருவரையும் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு வீட்டில் ஒருவாரகாலம் தங்கவைக்கிறார் ஜம்பிகாவின் தந்தை இளங்கோ குமாரவேல். கட்டுப்பாடுகள் உடையாமல் காதல்நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் கதை. காதலர்களின் குடும்ப பிரச்சனைகளையும்ஒருவருக்கொருவர் மறைமமாக விட்டுக் கொடுத்து காதலின் தன்மையை உணர்த்துவது, தென்றலின்தழுவலில் அசைந்தாடும் மலர் போல் கதை நகர்கிறது. அனைத்து அம்சங்களும் அலங்கரிக்கப்பட்டதிரைக்கதை. காதலர்கள் கண்டுகளிக்க வேண்டிய தொடர் ‘பானிபூரி‘.