அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா நடிக்கும் படம் “பாம்”

செம்பிரோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி,   பால சரவணன், டி.எஸ்.கே,. கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் படமாக  “பாம்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிகழ்வில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது: பாம் மிக சிறப்பான படம், கதை கேட்டவுடன் எனக்குப் பிடித்தது. இமான் சார்  இப்படத்தில் ஒப்புக்கொண்டு இசையமைத்தது மகிழ்ச்சி. அவர் தான் நான் சரியாக இருப்பேன் எனறு கூறியுள்ளார். ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்.*******

GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம், இன்னும் நிறைய நல்ல படம் செய்ய வாழ்த்துக்கள். இந்தப்படம் மிக ஜாலியான படமாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள்  இயக்கம் – விஷால் வெங்கட் தயாரிப்பு –  சுதா சுகுமார் இசை – D இமான் கதை & திரைக்கதை – மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்  வசனம்  – மகிழ்நன் BM  ஒளிப்பதிவு – P.M ராஜ்குமார் படத்தொகுப்பு – G.K. பிரசன்னா  கலை இயக்கம் – மனோஜ் குமார்  உடை வடிவமைப்பு – பிரியா ஹரி, பிரியா கரண் நடன அமைப்பு – அப்ஸர்  சண்டைப்பயிற்சி – முகேஷ் மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) நிர்வாகத் தயாரிப்பாளர் – D சரவண குமார்