ரமணா கம்யூனிகேஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ” காமராஜ் ” என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து 2004 ஆம் ஆண்டு வெளியிட்டார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன். அந்த திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த படம் என்று போற்றப் பட்டு சிறப்பு பரிசும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ” காமராஜ் ” திரைபடத்தின் இரண்டாம் பாகமாக ” பெருந்தலைவர் காமராஜ் – 2 ” தற்போது தயாரிக்கப் படுகிறது. காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது. காமராஜரின் 46 வது நினைவு தினமான ( அக்டோபர் 2) இன்று காமராஜர் வாழ்ந்த நினைவு இல்லத்தில் ஜி.கே.வாசன் அவர்கள் துவங்கி வைத்தார். டாக்டர்.வேணுகோபால். Ex.M.P அவர்களும் கலந்து கொண்டார்.
காமராஜரின் முக்கியமான திட்டமான பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு பகல் உணவு திட்டத்தை தொடங்கி வைப்பது போல் காட்சி படமாக்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் -2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை, நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான A.J.பாலகிருஷ்ணன். காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் நடிக்கிறார். மற்றும் தீனா தயாளன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் செந்தூர் நாகராஜன், கவிஞர் புருஷோத்தமன். ஆகியோர் பாடல்கள் எழுத உள்ளனர்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – ரமணா கம்யூனிகேஷன்ஸ்.