கோல்டன் ஈகிள் ஸ்டுடியோ சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் அறிமுக நிகழ்வில், திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசுகையில், “இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். அம்ரீஷ் என் பிள்ளைகளில் ஒருவன், இன்னும் அவன் பெரிய ஆளாக வருவார். நாயகி ரெண்டு பேர் வரவில்லை, என்கிறார்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிய கதாநாயகிகளை ஏன் படத்தில் நடிக்க வைத்தீர்கள், இனிமேல் அந்த இரண்டு பேருக்கும் தமிழில் யாரும் வாய்ப்பு தரக்கூடாது. இதோ அடுத்த படத்தில் நடிக்கும் நடிகை வந்திருக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள். என் நண்பன் திருமலை மனக்கஷ்டத்தில் எல்லாவற்றையும் கொட்டி விட்டார். ஒரு தயாரிப்பாளருக்கு நன்றி மறந்தவனை நடிக்க வைக்காதீர்கள். இந்தப்படத்தில் அம்ரீஷ் அருமையான பாடல்கள் தந்துள்ளார். இயக்குநர் ஏ வெங்கடேஷ் 32 நாட்களில் படத்தை எடுத்து முடித்துள்ளார். பட முன்னோட்டக் காட்சி மிக அருமையாக உள்ளது. தில் ராஜா வெல்லும் ராஜாவாக இருக்கும். விஜய் சத்யா ஒரு ஆணழகன், தமிழ்மகன் நல்ல நடிகனாக வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்போது வரும் நடிகர்களுக்கு வரும் போதே எம் ஜி ஆர் ஆகிவிட வேண்டுமென ஆசை. ஆனால் அவர் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது. சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவர். அவர், அதிலிருந்து உழைத்து வந்தவர். அவர் அருமை யாருக்கும் வராது.**********
இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது… எல்லோருக்கும் நன்றி, இப்படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள், ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள் என்றார்கள், நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன் வரவில்லை. இது தான் சினிமா. விஜய் சத்யா ஒரு நாள் கூப்பிட்டு, கதை சொன்னார் என் கருத்தைக்களை சொன்னேன். சார் நீங்க தான் டைரக்ட் பண்ணனும் என்றார். என் ஸ்டைலில் இல்லையே எனத் தயங்கினேன் ஆனால் நீங்கள் தான் பரபரவென டைரக்ட் செய்வீர்கள் என்றார். மகிழ்ச்சியுடன் ஒகே சொன்னேன். எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர் கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஷெரீனுக்கு முக்கியமான ரோல், சம்யுக்தாவிற்கும் முக்கியமான ரோல், இருவரும் வரவில்லை. வனிதா இந்தப்படத்தில் இருப்பது ஆடியன்ஸுக்கு தெரியக்கூடாதென நினைத்தேன். இன்று வேறு வழியில்லாமல் வரவைத்து விட்டேன். அவர் கதாப்பாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும். அம்ரீஷ் உடன் நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் பொறுமையாக மிக அழகாகப் பாடல்கள் தந்துள்ளார். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி – மனோ V.நாராயணா கலை – ஆண்டனி பீட்டர் நடனம் – செந்தாமரை எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ் ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன் தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல் புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி – அருண் மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். தயாரிப்பு – கோவை பாலசுப்ரமணியம்.