பத்திரிக்கையாளர்களின் நேர் நிலையான விமர்சனங்கள்தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது – நடிகர் மணிகண்டன்

மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் “குட் நைட்” இப்படத்தின் வெற்றி குறித்து அப்படத்தின் கதாநாயகன் மணிகண்டன் கூறும்போது, “இப்படத்தின் வெற்றி பத்திரிக்கையாளர்களாகிய உங்களின் நேர் நிலையான விமர்சனங்களுக்கு பிறகுதான் தீர்மானிக்கப்பட்டது. நல்ல திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பது மட்டும் மனநிறைவு உண்டாகாது. அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை எந்த வகையில் பெறுகிறது என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவானசில்லுகருப்பட்டிபடத்தை அதன் தரத்தை உணர்ந்து திரையரங்கில் வெளியிட்டு சாதித்தார் விநியோகஸ்தர் சக்திவேலன். அவர் இந்த திரைப்படத்திற்கும் பணியாற்றி வெற்றி பெற வைத்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.************

இயக்குநரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. கதைசொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் நிறுத்திவிட்டு, இந்த இடத்தில் இந்த இசை இடம் பெறும்என்பார். அதன் பிறகு இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மீதமுள்ள கதையை விவரிப்பார். பிறகுஇசையை நிறுத்திவிட்டு, வேறொரு காட்சியில் இருந்து கதையை சொல்லத் தொடங்குவார். இவர்கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்தபடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது.

முதல் பட இயக்குநர் மீதான அழுத்தத்தை அவர் எதிர்கொண்ட விதமும் எனக்கு பிடித்திருந்தது. அதேதருணத்தில் படத்தின் வெற்றிக்காக யார் எந்த கருத்தினை சொன்னாலும், அதில் உள்ள உண்மையைஉணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவரிடம் இருந்தது.. இயக்குநரிடம் இருக்கும் இந்த விசயங்கள்அவரை எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக உருவாக்கும்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்த கதை மீதும், மணிகண்டன் மீதும், இந்த பட குழுவினர்மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார். எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கைஇல்லாத போது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்திற்காக இயக்குநர் விநாயக்குடன் இணைந்து திரைக்கதை விவாதத்தில்ஈடுபட்டிருக்கிறேன். அதன் போதே இப்படத்தின் தொகுப்பாளரான பரத் விக்கிரமனின் பங்களிப்புஇருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

எனக்கும், ரமேஷ் திலக்கிற்கும் இருக்கும் நட்பு வித்தியாசமானது. எனக்கு விஜய் சேதுபதி எப்படி ஒருஅண்ணனாக ..வழிகாட்டியாக.. இருக்கிறாரோ.. அதேபோல் தான் ரமேஷ் திலக்கும் என் வளர்ச்சியில்அக்கறை காட்டி வருகிறார். அவரால்தான் இந்த படக் குழுவினர் எனக்கு அறிமுகமானார்கள். இந்தப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்தஅனுபவம் மறக்க இயலாது.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம்என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றையவெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்என்றார்.

இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் பேசுகையில், ” இப்படத்தின் வெற்றிக்காக பணியாற்றிய அனைவரதுபெயரையும் இந்த மேடையில் குறிப்பிடுவது தான் வெற்றிக்கான அறம் என கருதுகிறேன்.

இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ் பி சக்திவேல், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிஷ், ஒளிப்பதிவாளர்ஜெயந்த் சேது மாதவன், பட தொகுப்பாளர் பரத் விக்கிரமன், கலை இயக்குநர் ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன்மற்றும் பிரதீபா, நடிகர்கள் மணிகண்டன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, உமா, கௌசல்யா நடராஜன், அமுதா என அனைவருக்கும் இந்த தருணத்தில்நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கதையை எழுதி முடித்த பிறகு அது முதலில் இயக்குநர் குழுவிற்கு தான் செல்லும். அந்ததருணத்திலிருந்து தொடங்கி, இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும் இந்ததருணம் வரை அவர்களது அயராத உழைப்பு தொடர்கிறது. இவர்களுக்குத்தான் என்னுடைய முதல்நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து திரைப்படங்களும் கூட்டு முயற்சியில்தான் உருவாகிறது. தனிநபராக ஒரு திரைப்படத்தைஉருவாக்கிட இயலாது. இதுதான் கலையின் அழகு என நான் நம்புகிறேன். மேலும் நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பால் உருவான திரைப்படத்தை மக்களிடம்கொண்டு சேர்ப்பிக்கும் பணியை பத்திரிக்கையாளர்களான நீங்கள் தான் மேற்கொள்கிறீர்கள். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சிக்கு பிறகு, நீங்கள் தெரிவித்த விமர்சனம்.. எழுதியஎழுத்துக்கள்.. ஆகியவை தான் இப்படத்தின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்தது. இதற்காககுட் நைட்படக் குழு, உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

சிறிய முதலீட்டில் உருவான படம் இதற்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கும்? எந்த தேதியில்வெளியாகும்? எந்த படங்களுடன் வெளியாகும்? என அச்சத்துடன் நாங்கள் இருந்தோம். எங்களின்அச்சத்தை அகற்றி, திரையரங்கத்தை வழங்கி, கை கொடுத்து மேலே உயர்த்திய விநியோகஸ்தர்சக்திவேலனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய வாழ்க்கையில் எல்லா காலகட்டத்திலும் முக்கியமான நபர்கள் அறிமுகமாவார்கள். அப்படிஎன் வாழ்க்கையில் அறிமுகமான நபர் தான்.. நண்பர்தான் யுவராஜ் கணேசன். இப்படத்தின் கதையைஎழுதி மூன்றரை வருடங்கள் வரை பல நிறுவனங்களுக்கு சென்று கதையைச் சொன்னேன். ஆனால் எந்தமுன்னேற்றமும் இல்லை. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, நண்பர் யுவராஜிடம்மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்ற திட்டமிட்டிருக்கிறேன்என சொன்னேன். உன் கதையை யாரும்தயாரிக்க முன்வரவில்லை என்றால், நான் தயாரிக்கிறேன் என நம்பிக்கை கொடுத்தார். அப்போதுஅவரிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. அதன் பிறகு அவருடன் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், அவரது தந்தை நாசரேத் பஸ்லியான் இணைந்தனர். இந்த மூவரும் இல்லை என்றால் இந்த படம்உருவாகி இருக்காது.

முதல் பட இயக்குநருக்கு பல்வேறு நெருக்கடிகளும், அழுத்தங்களும் இருக்கும் என்பார்கள். ஆனால்எனக்கு எந்தவித அழுத்தமோநெருக்கடியோ.. இல்லை. நான் எழுதிய கதையில் சிறிய அளவிற்கு கூடசமரசம் செய்யாமல், முழுமையான சுதந்திரத்துடன் படத்தினை உருவாக்கினேன். இதனை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இந்தப் படத்தின் வெற்றியால் துள்ளிக் குதித்து சந்தோஷத்தை கொண்டாடாமல் இயல்பாக இருப்பதற்குஇப்படத்தில் நாயகனாக நடித்த மணிகண்டனின் நட்பும், அவருடனான உரையாடலும் தான் காரணம்.

இப்படத்திற்காக இயக்குநர் பாலாஜி சக்திவேலை சந்தித்து அவரிடம் திரைக்கதையை வழங்கினேன். அவர் அதை வாசித்து விட்டு பாராட்டியது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்புதளத்தில் இயக்குநருக்குரிய முன்னுரிமையும் முக்கியத்துவத்தையும் அளித்து பணியாற்றியது மறக்கஇயலாத  அனுபவம்.

இப்படத்தின் திரைக்கதையை வாசிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அனைத்து கலைஞர்களையும்ஒருங்கிணைத்தது. ஆரோக்கியமான உரையாடலுக்காக நேரமும், வாய்ப்பும் அளித்ததற்கு இந்ததருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் ஜோதிடர் ஒருவர் பேசும் காட்சியில் முதலில் அவருக்கான பதிலை ரமேஷ் திலக் தான்பேசுவதாக அமைத்திருந்தேன். அப்போது அக்காவாக நடித்த நடிகை ரேச்சல், ‘இப்போதும்பெண்களுக்காக ஆண்கள்தான் பரிந்து பேச வேண்டுமா?’ என கேட்டார். அவருடைய பேச்சிலிருந்தவீரியம் புரிந்து உறைந்து போனேன்‌. அதன் பிறகு மணிகண்டனிடம் விவாதித்து அக்கா பேசுவது போல்உரையாடலை மாற்றினோம். இந்த காட்சியினை திரையரங்கில் காணும் போது கிடைக்கும்கைத்தட்டல்களுக்காக.. நான் இந்த தருணத்தில் நடிகர் ரேச்சலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.