சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ மே.10ல் வெளியீடு

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நகைச்சுவை  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று  வெளியாகிறது. தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.********

தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசியதாவது… சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது.  அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்.  என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார். சந்தானம் சார் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி. செல்லா இந்தப்படத்திற்காக எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள். முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

நடிகர் சந்தானம் பேசியதாவது…  ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக  இப்படத்தை எடுத்துள்ளார். சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். ‘கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.