“அந்த நாள்” திரைப்பட விமர்சனம்

க்ரீன் மேஜிக் எண்டர்டெய்மெண்ட் தயார்ப்பில் விவி.கதிரேசன் இயக்கத்தில் ஆர்யன் ஷாம், ஆத்யா பிரசாத், லிமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமாம் அண்ணாச்சி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அந்த நாள்”. திரைப்பட இயக்குநரான ஆர்யன் ஷாம், ஆத்யா பிரசாத், லிமா பாபு ஆகிய நடிகைகளுடன் தனது உதவியாளரான இமான் அண்ணாச்சி, கிஷோர் ராஜ்குமாருடன் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள ஒரு ஒதுக்குபுறமான “பஞ்சமி” என்ற பங்களாவுக்கு கதை பற்றிய கலந்துரையாடலுக்காக செல்கிறார்கள். அந்த பங்ஜளாவிக் இரவு நேரங்களில் சில அமான்ஷ்யங்கள் நடக்கின்றன. ஒரு முகமூடி மனிதன் நரபலி கொடுக்கும் காட்சிகள் நடக்கின்றன. இதனால் அதிர்ந்துபோன படக்குழுவினர் அந்த பங்களாவிலிருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் வெளியேற முடியவில்லை. அந்த முகமூடி மனிதன் யார்? ஏன் அவர்களால் வெளியேற முடியவில்லை? நரபலிகள் ஏன் நடக்கிறது? படக்குழுவினர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை. கதாநாயகனான ஆர்யன் ஷாம், திரையுலக பாரம்பரியம் மிக்க ஏ.வி.எம். நிறுவனத்தின் ஸ்தாபகர் ஏ.வி.மெய்யப்பன் செட்டியாரின் மகன் வழி பேத்தியை (ஏ.வி.எம்.குகனின் மகள்) திருமணம் செய்தவர். ஒரு கதாநாயகனுக்குள்ள கவர்சியான தோற்றம் கொண்டவர். இப்படத்தின் முன்பகுதியில் அமைதியான நடிப்பையும் பின் பாதியில் ஆக்ரோஷமான நடிப்பையும் கொடுத்து அசத்தியுள்ளார். அறிமுக நடிகராக இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகராக பிரதிபலிக்கிறார். அறிவு பூர்வமான நவீன காலத்தில் ஏன் நரபலி கதையை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழும்புகிறது. சமூக சிந்தனை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் ஆர்யன் ஷாம் நட்சத்திர நடிகராக திரைவானில் மின்னுவார். திரைக்கதை ஓட்டத்தை இயக்குநர் இன்னும் கொஞ்சம் சுவாரிஷ்யம் படுத்தியிருக்கலாம். இரவு நேர ஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. இமாம் அண்ணாச்சியின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியுள்ளது. நடிகை ஆத்யா பிரசாத்தும் லிமா பாபுவும் திகிலடையும் காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார்கள்.