கிரீஷ் நெய்யார் தயாரிப்பில் தாமரக் கண்ணன் இயக்கத்தில் அர்ஜூன், நிக்கி கல்ராணி, ஹரிஸ் பெரடி, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “விருந்து”. கோடீஸ்வரரான நிக்கி கல்ராணியின் அப்பா கொலை செய்யப்படுகிறார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு நிக்கி கல்ராணியையும் கொலை செய்ய கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். தப்பியோடும் நிக்கி கல்ராணியை கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றுகிறார் கதாநாயகன் அர்ஜூன். ஆனால் காப்பாற்றிய அர்ஜூனனையே கொலை செய்ய முயற்சிக்கிறார் நிக்கி கல்ராணி. இந்த்க கொலைகள் எல்லாம் எதற்காக நடக்கின்றன என்பதுதான் கதை. அதிரடி நடிப்புக்கு பேர்போன நடிகர் அர்ஜூன் இளமைவேகம் இன்றும் குறையாமல் பழைய வேகத்துடனே நடித்திருக்கிறார் அருமை. பயத்தின் உணர்வை முகத்தில் காட்டும் நிக்கி கல்ராணியின் நடிப்பு அபாரம். உச்சக்கட்ட காட்சியில் மட்டும் முகத்தைக் காட்டும் ஹரீஸ் பெரடி தனது கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடித்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களின் வச்சக்கண் வாங்காமல் படத்தை பார்க்க செய்கிறது திரைக்கதை. நாட்டில் இன்றும் நடந்து கொண்டிருக்கும் மூட நம்பிக்கைக்கு எதிராக சமூக சிந்தனையுடன் படத்தை இயக்கிய தாமர்க் கண்ணன் பாராட்டுக்குரியவர்.