நாகர்கோவில் பகுதியில் வாழும் நந்தா எனும் ஆட்டோக்காரனுக்கும் அதே ஆட்டோவில் தினமும் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தை யமுனாவிற்கும் இடையே மலரும் அன்பின் வெளிப்பாடே ” கிரீன் சில்லீஸ்”. குழந்தைகள் பாலியலை தோலுரித்துக்காட்டும் கதையம்சம் கொண்டதே “கிரீன் சில்லீஸ்”. பல படங்களை இயக்கி தயாரித்த சஞ்சய் ராம் இப்படத்தை இயக்கி உள்ளார்.
கதையின் நாயகன் லெனின் ஆட்டோ ஓட்டும் நந்தாவாக அறிமுகமாகிறார். நாயகன் லெனினின்மு றைப்பெண்ணா. ககன தீபிகாவும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விலைமாது மகியாக டெல்லியைச் சேர்ந்த திவ்யாங்கனா மலையாளத்தில் பிரபல நடிகரான சாய்குமாரின் பேத்தியாகிய நந்தனா தும்பி, நூற்றுக்கணக்கான படத்தில் நடித்த சாப்ளின் பாலு குழந்தைகளை விற்கும் புரோக்கராகவும் பல படங்களை இயக்கி தயாரித்த சஞ்சய் ராம் மன்மதன் எனும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுமுகங்களாகிய பரூக், தினேஷ் நந்தித், பேபி தேவநந்தா, பேபி அனுக்ரகா, பேபி கார்த்திகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பினேஷ் தம்பி, இசை – G. ராம்
பாடல்கள் – சஞ்சய்ராம், பாலா சீதாராமன்
தயாரிப்பு – G.S சினிமா இண்டர் நேஷனல், ரெட் குளோபல் நெட்ஒர்க்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – சஞ்சய் ராம்
இரும்புக் கூட்டுக்குள்ளே இரு மனசு பறக்கையிலே குறும்பு பார்வையிலே குறுநிலவு சிரிக்கையிலே அரும்பு முகத்துக்குள்ளே அழகழகா வானவில்லே….எனும் பாடலை பாலா சீதாராமன் எழுத கௌசிக் பாடியுள்ளார். கடவுளை பாக்கணுமே கண்டபடி கேக்கனுமே பாத்தவுங்க யாரிருக்கா கேட்டவங்க பதிலிருக்கா காலம் சொல்லும் வாழ்க்கையில தொடரும் இந்த பயணத்துல கல்லே கடவுளே கருணையை நீ காட்டலியே ..எனும் பாடலை சஞ்சய் ராம் எழுத ராம் பாடியுள்ளார். இதன் படப்பிடிப்பு கன்னியாக்குமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், ஆலப்புழா ஆகிய இடங்களில் 35 நாட்களில நடைபெற்று முடிவடைந்தது. விரைவில் வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் தொடர்பு: வெங்கட்