ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் பதாகை வெளியீடு

திட்டம் இரண்டுபடத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம்அடியே‘.  இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை கௌரி கிஷன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரப. முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் மதும்கேஷ் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகிறார். மேலும் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பதாகையை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்ஈ***********

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன்இசையமைத்திருக்கிறார். பட தொகுப்பு பணிகளை முத்தையன் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர்மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம்சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம் குமார் தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பாளரான பிரபா பிரேம்குமார்ஏராளமான குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி அளித்திருக்கும் இவர், திரைப்படத்துறையின் மீதான ஆர்வத்தால் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட தயாரிப்புநிறுவனத்தை தொடங்கியுள்ளார், ரசிகர்களால் கொண்டாடப்பட்டகிளாப்எனும் திரைப்படத்தின் மூலம்இணை தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் தற்போதுஅடியேபடத்தின் மூலம் நேரடியாக திரைப்படத்தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகி வரும்பெயரிடப்படாத படத்தையும் தயாரித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐந்திற்கும் மேற்பட்டபிரம்மாண்டமான பட்ஜெட் படைப்புகளையும் தயாரிக்கும் திட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” தமிழில் ஏராளமான அறிவியல் புனைவு கதைகள் வெளியாகிஇருக்கின்றன. ஆனால் அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன் மல்ட்டி வெர்ஸ் தொழில்நுட்பபின்னணியில் காதலை சொல்வதில்அடியேதிரைப்படம் தான் முதல் படைப்பு. இத்திரைப்படத்தின் ஒருநிமிடத்திற்கு மேலான மோஷன் போஸ்டர் வெளியிடப்படுகிறது. இதன் இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்வித்தியாசமாக தோன்றுவது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும்என்றார்.

அடியேபடத்தின் மோசன் போஸ்டரில்இலங்கை பிரதமர் சீமான் மெட்ராஸ் வருகை… ‘யோகன் அத்தியாயம்1′ 150 நாள் போஸ்டர்.. ‘தலஅஜித் குமார் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 பந்தயத்தில்ஐந்தாவது முறையாக வென்றிருப்பதுதமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் புது கட்டிட திறப்பு விழா.. விஷால்தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார்சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் 3.0…என மல்ட்டிவெர்ஸ் உலக கலாட்டாவை.. புதிய தொழில்நுட்ப பின்னணியுடன் விவரித்திருப்பதும், இதனூடாக நாயகன் ஜீவி பிரகாஷ் குமார் அப்பாவியாகவும், அர்த்தமுள்ள பார்வையுடனும் தோன்றுவது.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.