அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

ஹாப்பி ஹை பிக்சர்ஸின் இரண்டாவது படத்திற்கு  பூஜையுடன் தொடங்கியது. இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும்  புதிய திரைப்படம்  பூஜையுடன. தொடங்கியது. கார்த்திகேயன் ராமகிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  இத்திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை  விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.*******

முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ்  ( Happy High Pictures) சார்பில் தயாரிப்பாளர்கள் அஷோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.  ‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், ‘போர் தொழில்’  பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும், ‘#AS23 ‘ படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.