70 : ரோமப் பேரரசர் டைட்டசும் அவரது ராணுவமும் ஜெருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர்.
1099 : முதலாம் சிலுவைப்போர் :- கிறிஸ்தவப் போர்வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர் ஜெருசலேம் கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர்.
1149 : திருக்கல்லறைத் தேவாலயம் ஜெருசலேமில் புனிதத்தலம் ஆக்கப்பட்டது.
1381 : இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்கு தலைமை வகித்த ஜான்பால் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சர்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
1823 : ரோம் நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் தேவாலயம் தீயில் சேதமடைந்தது.
1857 : சிப்பாய் கலகம் :- கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
1888 : ஜப்பானின் பண்டாய் எரிமலை வெடித்ததில் 477 பேர் உயிரிழந்தனர்.
1916 : வாஷிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங்,
ஜார்ஜ் வெஸ்டர் வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
1922 : ஜப்பானில் ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது.
1927 : வியன்னாவில் 89 ஆர்ப்பாட்டகாரர்கள் ஆஸ்திரேலியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946 : பிரிட்டன் வடக்கு போர்னியோவை (இன்றைய மலேசியாவின் சபாவில்) தனதாக்கியது.
1954 : இரண்டு வருட தயாரிப்புக்கு பின்னர் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்க விடப்பட்டது.
1955 : அணு ஆயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர்.
1959 : அமெரிக்காவில் எஃகு தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது.
இது அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாட்டு
எஃகு இறக்குமதிக்கு வழிவகுத்தது.
1971 : ஐக்கிய செம்படை ஜப்பானில் நிறுவப்பட்டது.
1975 : முதலாவது அமெரிக்கா- சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்போலோ – சோயுஸ் விண்கலம் 5 விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.
இந்தியாவில் முதல் முதலாக 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
1979 : மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
1983 : பாரிஸில் ஓர்லி விமான நிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
1988 : அமேசான் நதியில் ஏற்கெனவே மூழ்கியிருந்த படகின் மீது மற்றொரு படகு மோதி மூழ்கியதில் 98 பேர் உயிரிழந்தனர்.
2003 : டைம் வார்னர், நெட்ஸ்கேப் நிறுவனத்தைக் கலைத்தார்.
இதே நாளில் மொஸில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது
2006 : ட்விட்டர் சமூக வலைத் தளம் ஆரம்பிக்கப்பட்டது.
2014 : மாஸ்கோவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 24 பேர் உயிரிழந்தனர்.
160 பேர் காயமடைந்தனர்.