“ஹிட் லிஸ்ட்” திரைப்பட விமர்சனம்

கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கத்தில் விஜய் கனிஷ்கா, சரத்குமார், கெளதம் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன் நடித்து வெளிவந்திருக்கும் படம் “ஹிட் லிஸ்ட்”. இப்படத்தில் இயக்குநர் விக்ரமன்  தன்மகன் விஜய் கனிஷ்காவை  கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தனது உதவி இயக்குனர்களான சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயனை இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியுள்ளார்.  எந்த உயிர்களையும் கொல்லாத ஜீவகாருண்யம் மிக்கவராக வாழ்கின்ற  விஜய் கனிஷ்காவை,   ஒரு முகமூடி மனிதன் கொலைகள் செய்ய வைக்கிறான். யார் அந்த முகமூடி மனிதன். ஜீவகாருண்யமிக்கவரான விஜய் கனிஷ்கா, யாரைக் காப்பாற்ற கொலைகள் செய்கிறார் என்பதுதான் கதை.  அறிமுக கதாநாயகனும் அறிமுக இயக்குனர்களுமான இவர்கள் புதுமுகங்களாகவே தெரியவில்லை.  விஜய் கனிஷ்கா பல படங்களில் நடித்து வெற்றி பெற்ற நட்சத்திர நடிகராக ஜொலிக்கும் அளவுக்கு  அற்புதமாக நடித்துள்ளார்.  பல வெற்றி படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குனர்களைப் போல் இந்த அறிமுக இயக்குனர்களும் இப்படத்தை அருமையாக இயக்கியுள்ளார்கள்.  ஒவ்வொரு திரைக்கதை  காட்சிகளும் புதருக்குள் புதைந்த புதிராகவே அமைந்துள்ளது. புதிரை வெளிப்படுத்தும் உச்சகட்ட காட்சிகள்  காட்சிப்படுத்தப்படாமல், வெறும் வசனத்தால் விளக்குகிறார் சரத்குமார். படம் முழுவதும் புதிரின் உச்சத்தையே தொட்டிருக்கிறது.  ரசிகர்களை நாற்காலையின் நுனிக்கு  கொண்டு செல்கிறது.  இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, திரை வானில்  மின்னுகின்ற நட்சத்திர நடிகராக மின்னுவார்.