“நண்பன் ஒருவன் வந்த பிறகு” திரைப்பட விமர்சனம்

ஐஸ்வர்யா, சுதா ஆகியோரின் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் லீலா, குமரவேல், விஷாலினி, இயக்குநர் ஆனந்த், பவானிஶ்ரீ கே.வி.பாலா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “நண்பன் ஒருவன் வந்த பிறகு”. கதாநாயகனும் இயக்குனருமான ஆனந்த் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தனது கதையை சொல்வதுபோல் படம் ஆரம்பிக்கிறது. சென்னையில் வேலை செய்யாமல் தனது நண்பர்களுடன் ஊர்சுற்றிக் கொண்டிருந்த ஆனந்த், ஒரு கட்டத்தில் அவர் கையில் பணமில்லாமல் சக நண்பனால் அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் கோபமடைந்த ஆனந்த் சிங்கப்பூருக்கு சென்று பணம் சம்பாதித்து சென்னைக்கு திரும்புகிறார். சென்னையில் ஆனந்த் காதலித்த காதலிக்கு வேறுவருடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. சக நண்பர்கள் ஏன் ஆனந்தை அவமானப்படுத்தினார்கள் என்பதுதான் கதை. அவமானப்படுத்த்ப்படுக் காட்சியில் கோபம் அடைவதிலும், உழைக்காமல் வீட்டில் தண்டச்சோறு சாப்பிடுவதாக குத்திக் காட்டுகின்ற அம்மாவிடமும் கோபப்படுகின்ற காட்சியில் ஆனந்த் மனிதனின் இயற்கை குணத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கின்றார். உச்சக்கட்ட காட்சியில், நண்பர்களால் ஏன் அவமானப்படுத்தப்பட்டோம் என்ற காரணத்தை அறிந்த போதுதான் நட்பைப்பற்றி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். படம்பார்க்கும் ரசிகர்களும் தங்களுக்கும் இதுபோல் நண்பர்கள் கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கத்துடன் செல்வார்கள். இப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டதில் அர்த்தம் இருக்கிறது.