சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான் – இயக்குநர் பேரரசு பேச்சு

ஐமாதிரைப்படத்தில் யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத்  தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ராகுல் ஆர் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.  இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்வில்  இயக்குநர் பேரரசு பேசியதாவது. இயக்குநர் பேரரசு பேசும்போது, இந்த ஐமா  படத்தில் பத்து பாடல்கள் என்ற போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .அதற்கு ஒரு தைரியம்வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் பேசும்போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் நிஜமாகவே நடித்தேன் என்றார். சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.உண்மை போல நம்ப வைக்க வேண்டும் அவ்வளவுதான். கத்தியால் குத்தும் காட்சி என்றால் நிஜமாகவே குத்தி விட முடியுமா? அப்படி எல்லாம் அபாயகரமான காட்சிகளில்  நடிக்கக் கூடாது .******

அப்படி டூப் இல்லாமல் அபாயகரமான காட்சியில் நடித்துவிட்டு என்னுயிர்த் தோழன் பாபு தன்30 ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இப்போது இறந்து விட்டார். இதை நாம் கவனிக்கவேண்டும்.எப்படி வேண்டுமானாலும் இப்போதுள்ள  தொழில்நுட்ப வசதிகளில் எடுக்க முடியும்.எவ்வளவோபடங்களில் எதார்த்தம் மீறி காட்சிகள் வருகின்றன. சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.தெருவில் கழைக்கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட சினிமாவில் பெரிய கதாநாயகர்கள் கூட செய்வதில்லை.அதற்கு அவசியமும்இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடிவருவது போல் எடுக்க முடியும்.

தமிழ்த் திரைப்படங்கள் பெரிய பெரிய கதாநாயகன் நடிக்கும் படங்கள் கூட செட் போட்டு வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல்போய்விடுகிறது. எங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.இது பற்றி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது ஆதங்கத்தை வெளியிட்ட போது அதைத்திரித்து திசை திருப்பி விட்டார்கள். இதைத் தவறாகச் சிலர் புரிந்து கொள்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெறவாழ்த்துகிறேன்என்றார்.